வீட்டின் அருகே விளையாடிய 12 வயது சிறுமி: மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ஆட்டோகாரர்
சென்னையில் 12 வயது சிறுமியை மிரட்டி பலமுறை மிரட்டி ஆட்டோ டிரைவர் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: பாடியில் வீட்டின் அருகே விளையாடிய 12 வயது சிறுமியை மிரட்டி பலமுறை ஆட்டோ டிரைவர் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் சென்னை அய்னாவவரத்தில் 13 வயது சிறுமி குடியிருப்பில் பணிபுரியும் 15 பேரால் 6 மாதங்களுக்கும் மேலாக பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடையவர்கள் போக்ஸோ மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமி பலாத்காரம்
இந்நிலையில் சென்னை பாடியில் 12 வயது சிறுமி ஒருவர் ஆட்டோ டிரைவரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8ஆம் வகுப்பு சிறுமி
சென்னை பாடி புது நகர் 4 வது தெருவைச் சேர்ந்த12 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் தந்தையை பிரிந்து நகராட்சியில் துப்பரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு
இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

ஒன்பது மாத கர்ப்பம்
சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஒன்பது மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் திருமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆட்டோ டிரைவர்
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியிடம் விசாரித்ததில் பாடி புதுநகர் 3 வது தெருவில் வசித்து வரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவி என்கிற பெருமாள் பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

விளையாட சென்ற சிறுமி
இதனை தொடர்ந்து ரவியை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர். ரவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமி அவரின் வீட்டின் அருகே விளையாட சென்றபோது அவரை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார்.

இரண்டு பெண் குழந்தைகள்
ஆட்டோ டிரைவரான ரவிக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தன் மகள் வயது உள்ள சிறுமியை தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications