12வயது சிறுமிக்கு ஹார்மோன் மாத்திரை கொடுத்து 20 வயது பெண்ணாக மாற்றி பலாத்காரம்: புதுவையில் பயங்கரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சிறுமிக்கு ஹார்மோன் மாத்திரைகள் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது- வீடியோ

  புதுச்சேரி: 12 வயது சிறுமிக்கு ஹார்மோன் மாத்திரைகளை கொடுத்து 20 வயது பெண்ணாக மாற்றி வெளிநாட்டு முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சிறுமிகளும் இளம்பெண்களும் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்படுவது நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் சிறுமி ஒருவருக்கு கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் திகாரி காக்னர். 66 வயதான இவர், கடந்த சில ஆண்டுகளாக புதுச்சேரியில் தங்கி இருந்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.ஒடிசா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் சென்று அங்கும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சேவை செய்து வருகிறார். இவருக்கு புதுச்சேரி கிருஷ்ணா நகரில் 4 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.

  ஒடிசாவை சேர்ந்த குடும்பம்

  ஒடிசாவை சேர்ந்த குடும்பம்

  அதில் ஒரு மாடியில் திகாரி தங்கி உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசா சென்றிருந்த அவர், அங்கிருந்து ஃபிலோமினா மற்றும் அவருடைய 3 மகள்கள், ஒரு மகன் ஆகியோரை தன்னுடன் புதுச்சேரிக்கு அழைத்து வந்தார்.

  தனது மற்றொரு வீட்டில்

  தனது மற்றொரு வீட்டில்

  ஏழைகளாக உள்ள அவர்களுக்கு உதவும் வகையில் அனைவரையும் தத்தெடுத்து இருப்பதாக அவர் கூறினார். அவர்கள் 5 பேரையும் தனது இன்னொரு வீட்டில் தங்க வைத்திருந்தார்.

  ஹார்மோன் மாத்திரைகளை..

  ஹார்மோன் மாத்திரைகளை..

  இந்நிலையில் அந்த சிறுமிக்கு திகாரி காக்னர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புதுச்சேரி குழந்தைகள் நல கமிட்டி தலைவர் டாக்டர் வித்யாவுக்கு இ-மெயில் மூலம் ரகசிய புகார் வந்தது. மேலும் 12 வயதே ஆன சிறுமிக்கு தொடர்ந்து ஹார்மோன் மாத்திரைகள் கொடுத்து 20 வயது சிறுமியை போல் மாற்றியிருக்கிறார் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டது.

  கட்டிப்பிடித்து முத்தம்

  கட்டிப்பிடித்து முத்தம்

  இதையடுத்து வித்யா அவரது குழுவினருடன் அந்த வீட்டுக்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்தார். அப்போது அந்த சிறுமி, திகாரி தன்னை அடிக்கடி கட்டிப்பிடிப்பார் முத்தம் கொடுப்பார் என கூறியுள்ளார். இதனைக் கேட்ட வித்யா பாலியல் தொல்லை நடந்ததை உறுதிப்படுத்திக்கொண்டார்.

  திகாரி கைது

  திகாரி கைது

  இதைத்தொடர்ந்து லாஸ்பேட்டை போலீசில் வித்யா புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திகாரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

  உதவ நினைத்தேன்

  உதவ நினைத்தேன்

  அதில் தான் ஒடிசா சென்றிருந்தபோது, இந்த குடும்பத்தை சந்தித்ததாகவும் அவர்கள் ஏழ்மை நிலையில் இருந்தனர் என்றும் கூறினார். மேலும் அந்த சிறுமிக்கு காலில் புண் ஏற்பட்டு கஷ்டப்பட்டு வந்தாள் என்று கூறிய திகாரி சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதற்கும், அவர்கள் குடும்பத்துக்கு உதவுவதற்கும் அழைத்து வந்ததாக தெரிவித்தார்.

  மகளாக நினைத்து முத்தம்

  மகளாக நினைத்து முத்தம்

  சிறுமிக்கு சிகிச்சை அளித்து தன்னுடைய மகளை போல பார்த்துக்கொண்டதாகவும் திகாரி தெரிவித்தார். மகளுக்கு கொடுப்பதாக நினைத்துதான் சிறுமிக்கு முத்தம் கொடுத்ததாகவும் தங்களின் நாட்டு கலாச்சாரப்படி முத்தம் கொடுப்பது தவறு இல்லை என்றும் பாலியல் தொல்லை எதுவும் செய்யவில்லை என்றும் திகாரி கூறினார்.

  தூதரக அதிகாரிகள் விசாரணை

  தூதரக அதிகாரிகள் விசாரணை

  அவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் என்பதால் புதுவையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தூதரக அதிகாரிகளும் போலீஸ் நிலையத்துக்கு வந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

  சிறுமிக்கு மருத்துவ சோதனை

  சிறுமிக்கு மருத்துவ சோதனை

  இதைத்தொடர்ந்து திகாரி காக்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி பெண்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  In Puducherry, a 12-year-old girl, has been given a hormone pills and and changed as a 20-year-old woman by the foriener. A 66 years old man raped a 12 years old girl by giving hormone pills in Puducherry.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற