நெல்லையில் பயங்கரம்.. பட்டபகலில் பேராசிரியர் வெடிகுண்டு வீசி வீடுபுகுந்து வெட்டிக்கொலை!

நெல்லை: பாளையங்கோட்டை அருகே பட்டபகலில் பேராசிரியர் ஒருவர் வெடிகுண்டு வீசி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தாமிரபரணி பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார் செந்தில்குமார். அப்போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டில் நாட்டு வெடிகுண்டை வீசிய அந்த கும்பல் செந்தில்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் செந்தில் குமார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என விசாரித்து வருவதோடு கொலையாளிகளையும் தேடி வருகின்றனர். பட்டபகலில் கல்லூரி பேராசிரியர் வெடிகுண்டு வீசியும் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!