மதுரை மருத்துவமனையில் மர்மக் காய்ச்சலுக்கு குழந்தை பலி - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி பலியான சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அழகு மீனாள் என்ற குழந்தை மர்மக் காய்ச்சலால் பாதிக்கபட்டு அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது.

இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அக்குழந்தை இறந்துவிட்டது. அக்குழந்தைக்கு சரியான சிகிச்சை அளிக்காத காரணத்தால் தான் இறந்தது என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், அம்மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மட்டுமின்றி கோவை, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 50க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

கொசு மூலம் பரவும் இந்தக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தி பொதுமக்களைப் பாதுகாக்க சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A girl child Azaku meenal died in Madurai government hospital due to high fever. Still there are 30 patients admitted in ICU and getting treatment.
Please Wait while comments are loading...