திருவாரூர் அருகே நகைக் கடையில் 2 கிலோ தங்கம், ரூ.1 கோடி பணம் கொள்ளை.. பங்குதார்களே கைவரிசை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள பாலாஜி ஜூவல்லரியில் அதன் பங்குதார்களே கொள்ளை அடித்தனர். இந்த சம்பவத்தில் அந்தக் கடையில் இருந்து இரண்டு கிலோ தங்கம், ஒரு கோடி பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த எழில்மாறன் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சீனிவாசன், பாலாஜி ஆகியோர் ஒன்றாக இணைந்து கூத்தாநல்லூர் ஆஸ்பத்திரிரோடு சாலையில் பாலாஜி ஜூவல்லரியயை 8 மாதமாக நடத்தி வந்தனர்.

A huge loss for gold palace owner because of theft in thiruvarur !

இது அந்தப் பகுதியியல் மிகவும் புகழ்பெற்ற ஜூவல்லரி ஆகும். இந்த நிலையில் இன்று அதிகாலையில் எழிமாறனுக்கு தெரியாமல் பங்குதாரர்கள் சீனிவாசன், பாலாஜி ஆகியோர் இரண்டு கிலோ தங்கம், ஒரு கோடி பணத்தினை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து எழில்மாறன் கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.இதனால் பாலாஜி ஜூவல்லரி எழில்மாறனிடம் நகைசீட்டு போட்ட வாடிக்கையாளர்கள், பழைய நகைகளை கொடுத்து, பணம் கொடுத்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து எழில்மாறன் தெரிவிக்கும் போது நகைசீட்டு போட்டவர்கள், பணம் கொடு‌த்து‌ள்ளவர்கள் அச்சப்பட தேவையில்லை, நாளை வழக்கம் போல கடை இயங்கும், காவல்துறை உதவியுடன் கடை நடைபெறும் என தெரிவித்தார்.இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A huge loss for gold palace owner because of theft in thiruvarur. The own partner of the company took everything and ran away.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற