நெல்லை மாணவர் விடுதியில் பயங்கரம்... உல்லாசத்துக்கு மறுத்த பெண் வெட்டிக் கொலை... கள்ளக்காதலன் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நெல்லையில் பணியாற்றும் இடத்தில் உல்லாசத்துக்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை அவரது கள்ளக்காதலன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டார்.

முக்கூடலை சேர்ந்த சந்திரசேகரனின் மனைவி ஆனந்தி (38). இவர்களுக்கு சுஜிதரன், அச்சுதன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சந்திரசேகரன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு ஆனந்தி தன்னுடைய 2 மகன்களுடன் வசித்துவந்தார்.

ஆனந்தியின் மூத்த மகன் சுஜிதரன் தற்போது பிளஸ் 2 முடித்துவிட்டு, கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பித்து இருந்தார். 2-வது மகன் அச்சுதன் பிளஸ் 1 படித்து வருகிறார். பேட்டையில் உள்ள சிறுவர்கள் தங்கும் இல்லம் ஒன்றில் ஆனந்திக்கு சமையல் செய்யும் வேலை கிடைத்தது.

பேட்டைக்கு குடியேறினார்

பேட்டைக்கு குடியேறினார்

ஒரு அறக்கட்டனை சார்பில் செயல்பட்டு வரும் அந்த இல்லமானது பள்ளி மாணவர்களின் தங்கும் விடுதியாகவும் உள்ளது. வேலை கிடைத்ததால் ஆனந்தியும் தன் மகன்களுடன் அந்த விடுதியில் குடியேறினார். அங்கு சமையல் வேலையும் செய்துவந்தார்.

வீட்டில் தனியாக...

வீட்டில் தனியாக...

வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை காலை விடுதியில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். இதனால் ஆனந்தி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவருக்கும், ஆனந்திக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சரமாரியாக வெட்டு

சரமாரியாக வெட்டு

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அந்த நபர் அங்கிருந்த அரிவாளால் ஆனந்தியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ஆனந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அந்த நபர் தப்பிவிட்டார். தகவலறிந்த நெல்லை நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

செல்லப்பா என்பவரிடம் விசாரணை

செல்லப்பா என்பவரிடம் விசாரணை

விசாரணையில் ஆனந்திக்கு முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையைச் சேர்ந்த செல்லப்பா (50) என்பவருடன் கள்ளக்காதல் இருந்ததாக தெரிந்தது. இதையடுத்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில் ஆனந்தியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

பரபர வாக்குமூலம்

பரபர வாக்குமூலம்

போலீஸிடம் செல்லப்பா அளித்த வாக்குமூலத்தில், ஆனந்தியின் கணவர் சந்திரசேகரன் ஓலைப்பெட்டி செய்யும் தொழில் செய்ததால் பனை ஏறும் தொழிலாளியான என்னிடம் ஓலா வாங்குவார். அப்போது அவரது வீட்டுக்கு அடிக்கடி செல்லும்போது ஆனந்தியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. சந்திரசேகரன் இறந்த பிறகும் ஆனந்தியின் வீட்டுக்கு சென்று பல்வேறு உதவிகளை செய்துவந்தேன். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

உல்லாசமாக இருந்தோம்

உல்லாசமாக இருந்தோம்

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாங்கள் உல்லாசமாக இருந்தோம். ஆனந்தி மாணவர் விடுதிக்கு வேலை செய்ய சென்றுவிட்டதால் என்னுடன் பழகுவதில்லை. இதனால் நேற்று காலை மாணவர்கள் பள்ளிக்கு சென்ற பிறகு அந்த விடுதிக்குள் சென்றேன். அப்போது ஆனந்தியிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறினேன். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

வெட்டிவிட்டேன்

வெட்டிவிட்டேன்

எத்தனையோ முறை கேட்டும் அவர் ஒப்புக் கொள்ளாததால் அங்கிருந்த அரிவாளால் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினேன். தற்போது போலீஸாரிடம் சிக்கிவிட்டேன் என்றார் செல்லப்பா.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A lady was murdered by her paramour for refusing for intercourse in a working place. He was arrested by Nellai town police.
Please Wait while comments are loading...