திருச்செந்தூரில் திடீரென நடந்த வினோதம்.. திகைத்து போன பக்தர்கள்.. அப்படியே மாறிய காட்சிகள்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ள வங்ககடல் சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. அத்துடன் அலைகள் எதுவுமே இல்லாமல் குளம் போல் காட்சி அளித்ததால் பக்தர்கள் திகைத்து போனார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு ஆகும். கடற்கரை அருகில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளதால், இந்த புண்ணிய தலத்திற்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீர் ஆடிவிட்டே, சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம் ஆகும்.

பொவதுவாக திருச்செந்தூர் பகுதியில் கடலானது அமாவாசை, பௌர்ணமி தினங்களில் உள்வாங்குவதும், சில மணி நேரம் கழித்து இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கம் ஆகும்.
அப்படித்தான் நேற்று முன்தினம் பௌர்ணமி என்பதால் கோவில் கடலானது சுமார் 100 அடி தூரம் சட்டென உள்வாங்கியது. இதனால் கடலின் அடியில் இருந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிந்தது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பாறை மீது ஏறிக்கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுமார் 100 அடி கடல் உள் வாங்கியதால் கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சியளித்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலையிலும் சுமார் 50 அடி தொலைவுக்கு கடல் உள்வாங்கியே காணப்பட்டது. இதனால் நேற்று காலையிலும் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது. ஆனால் நேற்று மதியம் கடல் தண்ணீர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சுனாமி எனும் ஆழிப்பேரலை தமிழகத்தின் கடற்கரை சார்ந்த கிராமங்களில் உள் புகுந்தது. வீரபாண்டியன்பட்டணம், அமலி நகர், மணப்பாடு, பெரிய தாழை, கூடுதாழை, கூட்டப்பனை, இடிந்தகரை, உவரி, பெருமணல் ஆகிய கிராமங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதைப்போல கன்னியாகுமரி சுற்றியுள்ள கிராமங்களில் சுனாமியின் பாதிப்பு பெருமளவில் இருந்தது. ஆனால் திருச்செந்தூர் முருகன் கோவில் பகுதியில் மட்டும் சுமார் 200 அடி தூரம் கடல் உள்வாங்கி அப்போது ஆச்சர்யம் அளித்தது. அப்போது பக்தர்கள் பலர் 'கடல் காத்த கந்தன்' செயல் என்று நெகிழ்ந்தனர்.
அதேநேரம் சுமத்ரா தீவிலிருந்து புறப்பட்ட சுனாமி அலைகளிலிருந்து திருச்செந்தூரை காத்து நின்றது இலங்கை, அலையின் வேகத்தை இலங்கை வாங்கி கொண்டது. ஆகவே எதிர் விளைவாக கடல் உள்வாங்கியது என்று விஞ்ஞான ரீதியாக சொல்கிறார்கள்
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications