அத்திப்பள்ளி பட்டாசு விபத்து.. 21 நாளில் காதல் கணவனை பறிகொடுத்த மனைவி.. மயான பூமியான கிராமம்
தர்மபுரி: தமிழக கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு விபத்தில் திருமணமான 21 நாளில் உயிரிழந்துள்ளார் புதுமாப்பிள்ளை ஒருவர். தனது காதல் கணவனை 21 நாளில் பறிகொடுத்துவிட்டு கதறி அழுதது தர்மபுரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் அத்திப்பள்ளி. அந்த இடம் தமிழ்நாடு கர்நாடாக மாநிலத்தின் எல்லைப்பகுதியாகும். பெங்களூருவின் புறநகர் பகுதியும் கூட.

அத்திப்பள்ளி பகுதியில் தீபாவளிப் பண்டிகை காலங்களில் சாலையின் இருபுறமும் ஏராளமான பட்டாசுக் கடைகள் மற்றும் குடோன்கள் அமைக்கப்படுவது வழக்கம் . அந்த வகையில் இந்த முறையும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 7ம் தேதி அன்று, அங்குள்ள பட்டாசு கடைகளுக்கு 3 சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் வந்திருந்தன. அட்டை பெட்டிகளில் இருந்த பட்டாசுகளை ஒவ்வொன்றாக இளைஞர்கள் இறக்கிக் கொண்டிருந்தனர். அப்படி பட்டாசுப் பெட்டிகளை இறக்கும்போது அவற்றிலிருந்த பட்டாசுகள் சில வெடித்ததில், தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் நீப்பத்துறையைச் சேர்ந்த, கிரி, பிரகாஷ்; திருப்பத்தூர் மாவட்டம் வெள்ளை குட்டை கிராமத்தைச் சேர்ந்த நிதிஷ், சந்தோஷ்; கள்ளக்குறிச்சி மாவட்டம் எடக்கல் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், வசுந்தராஜ், அப்பாஸ்; ஓசூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ்,தருமபுரி மாவட்டம் டி. அம்மாபேட்டையைச் சேர்ந்த வேடப்பன், முனிவேல், இளம்பரிதி, ஆகாஷ், ஆதிகேசவன், விஜயராகவன் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக பட்டாசு கடை உரிமையார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் ஒரே கிராமத்தில் ஏழு பேர் இறந்து போய் உள்ளனர். தருமபுரி மாவட்டம், டி. அம்மாபேட்டையை சேர்ந்த வேடப்பன், முனிவேல், இளம்பரிதி, ஆகாஷ், ஆதிகேசவன், விஜயராகவன் உள்பட மொத்தம் 7 பேர் இறந்துள்ளனர்.
இதில் வேடப்பன் திருமணம் ஆன 21 நாளில் இறந்துள்ளார். பி.எட். படித்துள்ள அவர், தனது கல்லூரி காதலியை கடந்த மாதம் 17ம் தேதி கல்யாணம் செய்திருக்கிறார். தீபாவளி திருவிழா நெருங்கியுள்ளதால் சீசன் வேலைக்காக பட்டாசு குடோனுக்கு நண்பர்களுடன் வேலைக்கு சென்ற நிலையில் விபத்தில் சிக்கி இறந்துள்ளார். கல்யாணம் ஆகி 21 நாட்களே ஆன நிலையில், காதல் கணவனை இழந்த வேடப்பனின் மனைவி கதறி அழுதது கண்போரை கலங்கவைத்தது.
இதனிடையே அத்திபள்ளி பட்டாசுக் கடை குடோனில் ஒரு ஆள் நடந்து செல்லும் அளவிற்கே குறுகிய வழி விட்டிருக்கிறார்கள்.மொத்தமாக பட்டாசுகளை அடுக்கி வைத்திருக்கிறார்கள். இதனால் பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருந்த போது தப்பி வர வழி இல்லாத நிலை ஏற்பட்டு ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் 14 பேர் அநியாயமாக இறந்து போய் இருக்கிறார்கள்.முறையாக விதிகளை கடைபிடித்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது, என்றும்,ஒருவேளை விபத்து ஏற்பட்டிருந்தாலும், இந்த அளவிற்கு உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்த வழக்கை கர்நாடகா மாநில போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதனிடைய 21 நாளில் இறந்த வேடப்பனின் தந்தை கூறும் போது, " என் மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்தான். கடந்த மாதம் தான் இரு குடும்பத்தினரும் இணைந்து பேசி கல்யாணம் செய்து வைத்தோம். அவன் வேலை செய்வதற்காக இங்கு வரவில்லை. நண்பர்கள் அழைத்தார்கள் என்பதால் இங்கு வந்தான். ஞாயிறு அன்று ஊருக்கு வந்துவிடுவதாக கூறியிருந்தான்.அதற்குள் இப்படி ஆகிவிட்டது. எனது மருமகள் இந்த துயரத்தை எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறாள் என்று நினைத்தால் எனக்கு பயமாக இருக்கிறது," என்றார் வேதனையுடன்..
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications