இந்த கொடூரர்களை தூக்கில் போட்டால் கூட குறைந்த தண்டனைதான்!
Recommended Video

சேலம்: "எப்ப பார்த்தாலும் இருமல் சத்தம்.. உன் தொல்லை தாங்கவே முடியலையே" என்று ஆத்திரமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் நோயாளி பாட்டியை தூக்கி வெளியில் வீசி எறிந்துள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரை சேர்ந்தவர் மேரி இவருக்கு வயது 70. இவருக்கு நீண்ட நாட்களாக ஆஸ்துமா தொந்தரவு உள்ளது. இதனால் தனது நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். மேரியின் சகோதரி சேலத்தில் உள்ளார். அவரை பார்க்க மேரி வந்திருந்தார்.

இரவெல்லாம் இருமல்
வந்த இடத்தில் ஆஸ்துமா தொல்லை அதிகமாகி விட்டது. இதனால் உறவினர்கள் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். வயது மற்றும் ஆஸ்துமாவின் தீவிரத்தால் பாட்டிக்கு இருமல் அதிகமாகி கொண்டே வந்தது. நேற்றிரவு முழுவதும் விடாமல் தொடந்து இருமிக் கொண்டே இருந்தார்.

வீசி எறிந்தனர்
இதனால் அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் எரிச்சலானார்கள்.. ஆத்திரமடைந்தார்கள்... கோபமடைந்தார்கள்... எப்ப பார்த்தாலும் இப்படியே இருமிட்டு இருந்தா என்ன அர்த்தம்? நாங்க எப்படி வேலை பாக்கறது? என்று பாட்டியை திட்டியபடியே ஆஸ்பத்திரிக்கு வெளியே உள்ள சைக்கிள் ஸ்டேண்டில் வீசிவிட்டு சென்றுவிட்டார்கள்.

தீவிர சிகிச்சை
நள்ளிரவில் இப்படி தூக்கி எறிந்துவிட்டதால் பாட்டியால் எழுந்து நடக்கவும் முடியவில்லை. இரவெல்லாம் கதறி அழுதார். காலையில்தான் பாட்டியின் நிலைமை பொதுமக்களுக்கு தெரியவந்தது. பதறியடித்த பொதுமக்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இப்போது பாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தப்பே இல்லை
ஆனால் பாட்டியை இப்படி மனசாட்சியே இல்லாமல் தூக்கி வெளியில் எறிந்த ஊழியர்கள் யார் என இதுவரை தெரியவில்லையாம். எனவே இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது... யார் என்று அடையாளம் தெரிந்தால் அவர்களுக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும் வகையிலான கடுமையான நடவடிக்கை எடுத்தால் கூட தப்பே இல்லை.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications