ஈரோடு அருகே.. மாமியார் குளிக்க போன நேரத்தில் 8 சவரன் நகையை அபேஸ் செய்த மருமகன்!
ஈரோடு: ஈரோட்டில் மாமியார் வீட்டில் 8 சவரன் நகையை திருடிய மருமகனை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோட்டில் உள்ள கல்யாண சுந்தரனார் வீதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (24). இவரது சின்ன மாமியார் நாகஜோதி, ஈரோடு அருகே உள்ள பள்ளியூத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், சந்தோஷ்குமார் சின்னமாமியார் நாகஜோதி வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றிருந்தார்.

அப்போது நாகஜோதி, அவரது மகள் நந்தினி ஆகியோர் தாங்கள் அணிந்திருந்த சுமார் 8 சவரன் நகையைக் வீட்டில் கழற்றி வைத்து விட்டு குளிக்கச் சென்றுள்ளனர். குளித்து விட்டு திரும்பி வந்தபோது, நகை காணமல் போனதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த சந்தோஷ்குமாரையும் காணவில்லையாம்.
இதனால் சந்தேகமடைந்த நாகஜோதி, ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இது குறித்து சந்தோஷ்குமாரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தான் நகையை திருடியதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து சந்தோஷ்குமாரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து 8 சவரன் நகையை கைப்பற்றினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications