கள்ளக்குறிச்சியில் பரிதாபம்.. ரேஷன் கடையில் மின்சாரம் தாக்கி குழந்தை பலி!
கள்ளக்குறிச்சி அருகே ரேஷன் கடையில் மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
கள்ளக்குறிச்சி: பால்ராம் பேட்டையில் ரேஷன் கடையின் சுவரில் இருந்த ஒயரை தொட்ட மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை தர்ஷினி. அங்குள்ள ரேஷன் கடைக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது ரேஷன் கடைக்கு வெளியே சுவரில் இருந்த எர்த் கம்பியை குழந்தை தொட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் அந்த குழந்தை தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது.
மின் சாரம் தாக்கி மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications