For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனுமதியின்றி கர்ப்பபையை நீக்கிய மருத்துவர்கள்.. தேனியில் பெண் போலீஸ் தீக்குளிக்க முயற்சி

தேனியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தனது அனுமதியின்றி கர்ப்பபையை நீக்கியதாக கூறி பெண் போலீஸ் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

தேனி: அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தனது அனுமதியின்றி கர்ப்பபையை நீக்கியதாக கூறி பெண் போலீஸ் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்ட ஊர்க்காவல் படை பிரிவில் பணிபுரிந்து வருபவர் சுமதி. கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் தேனிஅரசு மருத்துவமனையில் அட்மிட்யாகியுள்ளார்.

A woman police tried to take fire bath in Theni collector office

அப்போது சுமதியின் கர்ப்பபையை அவரது அனுமதியில்லாமலேயே மருத்துவர்கள் நீக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுமதி இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் சுமதியை தடுத்து மீட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது

அண்மையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ், ரவி என்ற இரண்டு காவலர்கள் சென்னை டிஜிபி அலுலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். தேனி மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மீது புகார் கூறிய அவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A woman police tried to take fire bath in Theni collector office. Woman police Sumathi accuses that Theni govt hospital doctors removed utres without her permission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X