For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதார் கார்டு வாங்கிட்டீங்களா? இதைப் கொஞ்சம் படிங்க!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிகமுக்கிய திட்டமான ஆதார் கார்டு திட்டத்திற்கு மோடி தலைமையிலான அரசில் மூடுவிழா நடத்திவிடுவார்கள் என்று நினைத்திருந்த நிலையில் ஆதார் அட்டை ஒவ்வொருவருக்கும் அவசியம் என்று கூறிவிட்டனர்.

இதனால் ஆதார் அட்டை வாங்காமல் அசால்டாக இருந்தவர்கள் எல்லோரும் இப்போது ஆதார் கார்டு நிரந்தர மையங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

Aadhar card in 2020 !!!!

லிங்கா படத்திற்கு டிக்கெட் வாங்க கியூவில் நிற்கும் கூட்டத்தை விட ஆதார் கார்டு வாங்குவதற்கு நிற்கும் கூட்டம்தான் அதிகமாக இருக்கிறது.

ஆதார் அட்டைக்கு பதிவு செய்வதற்காகவும், புகைப்படம் எடுப்பதற்காகவும் தாலுகா அலுவலகங்களில் கூட்டம் அள்ளுகிறது. பலர் அலுவலகங்களுக்கு விடுப்பு எடுத்து ஆதார் அட்டைக்கு பதிவு செய்யும் அளவுக்கு நிலைமை படு சீரியஸாக உள்ளது.

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஏன் கிரீன் கார்டு கூட சீக்கிரம் வாங்கிரலாம் போல இந்த ஆதார் கார்டு வாங்கிறதுக்குள்ள நான் படுற பாடு இருக்கே... ஸ்ஸ்ஸ் அப்பா முடியலை என்று அலுத்துக்கொள்கின்றனர் பலர்.

அவர்களுக்காகவே ஆதார் அட்டை வாங்கிய பின்னர் 2020 ஆம் ஆண்டில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று கூறும் வகையில் ஒரு ஜோக் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகிறது. சூடாக இருப்பவர்கள் இந்த ஜோக்கினை படித்து கூல் ஆகவும்.

கடை ஆப்பரேட்டர்: ஹலோ.. பீட்சா ஹட்..

நம்ம ஆளு: என்னோட ஆர்டரை எடுத்துக்குறீங்களா ப்ளீஸ்..?

கடை ஆப்பரேட்டர்: ஆர்டர் சொல்றதுக்கு முன்னாடி உங்க ஆதார் கார்டு நம்பரை சொல்றீங்களா சார்..?

நம்ம ஆளு: பீட்சா வாங்க இதெல்லாமா கேட்பீங்க... சரி எழுதிக்கங்க என்னோட ஆதார் கார்டு நம்பர் 889861356102049998-45-54610

கடை ஆப்பரேட்டர்: ஸோ.. நீங்கதான் மிஸ்டர் நாராயணசாமி.. நம்பர் 17 ராக்கியப்பா தெரு, மயிலாப்பூர்ல இருந்து கூப்புடுறீங்க.. உங்க வீட்டு நம்பர் 40942366, ஆஃபீஸ் நம்பர் 26452302 மொபைல் நம்பர் 9542662566. இப்ப நீங்க உங்க மொபைல்ல இருந்து எங்களுக்கு கால் பண்ணி இருக்கீங்க..

நம்ம ஆளு: வாவ்.. இத்தனை நம்பரையும் எப்புடி புட்டு புட்டு வைக்கிறீங்க.

கடை ஆப்பரேட்டர்: நாங்க மெயின் சிஸ்டத்தோட கனெக்ட்டடா இருக்கோம் சார்..

நம்ம ஆளு: வெல்.. எனக்கு ஒரு இறால் பீட்சா ஆர்டர் எடுத்துக்க முடியுமா..?

கடை ஆப்பரேட்டர்: என்னைக் கேட்டா அது வேணாம்னுதான் சொல்லுவேன்...

நம்ம ஆளு: சற்றே அதிர்ச்சியுடன்... ஏன்? எதுக்குங்க..?

கடை ஆப்பரேட்டர்: உங்க மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்படி உங்களுக்கு ஹை பிபி இருக்கு.. அதுவுமில்லாம உங்களோட கொலஸ்ட்ரால் லெவலும் அதிகமா இருக்கு..

நம்ம ஆளு: என்னது.? அப்ப நான் என்னதான்ய்யா சாப்புடுறது..?

கடை ஆப்பரேட்டர்: எங்களோட லோ ஃபேட் ஹெக்கியன் மீ பீட்சாவை ட்ரை பண்ணிப் பாருங்க.. அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..

நம்ம ஆளு : எனக்கு புடிக்கும்னு உங்களுக்கு எப்புடிப்பா தெரியும்..?

கடை ஆப்பரேட்டர்: போன வாரம் நேஷனல் லைப்ரரில இருந்து பாப்புலர் ஹெக்கியன் உணவுகள்ன்ற புத்தகத்தை நீங்க எடுத்திருக்கீங்க சார்..

நம்ம ஆளு : அடக்கடவுளே.. போதும்ய்யா... உங்க விளக்கம். அப்பன்னா நீங்க சொன்னதையே மூணு பீட்சா ஃபேமிலி சைஸ்ல குடுத்துருங்க..

கடை ஆப்பரேட்டர்: நிச்சயமா சார்.. பத்து பேரு கொண்ட உங்களோட குடும்பத்துக்கு அது நிச்சயமா போதுமானதா இருக்கும்.. பில் அமௌண்ட் 2450 ரூபா சார்..

நம்ம : என் கார்டுலயே நான் பே பண்ணிறலாமா..?

கடை ஆப்பரேட்டர்: இல்ல சார்.. நீங்க கேஷாத்தான் தர வேண்டி இருக்கும். உங்க கிரெடிட் கார்டு லெவலை நீங்க க்ராஸ் பண்ணிட்டீங்க. அது மட்டும் இல்லாம போன அக்டோபர்ல இருந்து 1,51,748 ரூபா க்ரெடிட் கார்டு பாக்கி வச்சிருக்கீங்க.. அதுல நீங்க கட்டாம விட்ட உங்க ஹவுசிங் லோனை நான் சேக்கலை..

நம்ம ஆளு: சரி. அப்பன்னா உங்காளு வர்றதுக்குள்ள நான் பக்கத்துல இருக்குற ஏடிஎம்முக்கு போயி கேஷ் எடுத்து வச்சுர்றேன்..

கடை ஆப்பரேட்டர்: அதுவும் முடியாது சார்.. இந்த ரெக்கார்டுபடி உங்க ஏடிஎம் ஓவர்டிராஃப்பட்ட லெவலையும் நீங்க தாண்டிட்டீங்க..

நம்ம ஆளு: அடடா. நம்ம விபரத்தை நம்மளை விட அப்டேட்டா வச்சிருக்கானே... என்று நினைத்தவாறே, நான் எப்புடியாவது கேஷ் ரெடி பண்ணி வச்சுர்றேன்.. நீங்க பீட்சாவை அனுப்புங்க.. எவ்வளவு நேரத்துல வரும்..?

கடை ஆப்பரேட்டர்: 45 நிமிஷம் ஆகும்.. அவ்வளவு நேரம் வெய்ட் பண்ண முடியாதுன்னா உங்கக பைக்ல வந்து நீங்களே கூட வாங்கிட்டு போயிறலாம் சார்..

நம்ம ஆளு: என்னது?

கடை ஆப்பரேட்டர்: உங்ககிட்ட ஒரு பைக் இருக்கு. அதோட நம்பர் 1122 சார்..

நம்ம ஆளு : ஐயய்யோ... இந்த படுபாவிக என் பைக் நம்பரை கூட தெரிஞ்சு வச்சிருக்கானுகளே..)

கடை ஆப்பரேட்டர்: வேற எதாவது வேணுமா சார்..?

நம்ம : ஒண்ணும் வேணாம்ப்பா.. நீங்க விளம்பரத்துல சொன்னா மாதிரி அந்த மூணு ஃப்ரீ கோக் பாட்டிலையும் சேத்து அனுப்பிருவீங்கள்ல..?

கடை ஆப்பரேட்டர்: நார்மலா குடுப்போம் சார்.. ஆனா உங்க மெடிக்கல் ரெக்கார்டுப்படி உங்களுக்கு சுகர் இருக்கு.. அதனால உங்க ஹெல்த்தை மனசுல வச்சு நாங்க அந்த ஆஃபரை உங்களுக்கு தரமுடியாது. சாரி சார்..

நம்ம ஆளு : போனில் திட்டி தீர்க்கிறார்... மவனே... நான் வந்தேன்னா...

கடை ஆப்பரேட்டர்: சார்.. சார்... டோன்ட் யூஸ் பேட் வேர்ட்ஸ்.... இப்புடிதான் ஒரு போலீஸ்காரரை கெட்ட வார்த்தைல திட்டினதுக்காக 2012 மார்ச்ல உங்களுக்கு ரெண்டு மாச சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் கிடைச்சதுங்குறதை மறந்துறாதீங்க..

நம்ம ஆளு : (மயக்கம் போட்டு விழுகிறார்)

இவ்வாறு முடிகிறது அந்த பகிர்வு!

இது ஜோக் போல தோன்றினாலும் இதுதான் உண்மை.

English summary
Aadhar card : A Must Must Read A Scene in 2020...
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X