கருணாநிதி போன்ற தலைவர்களை இழந்தது மிகப் பெரிய இழப்பாகும்- பார்த்தி
Recommended Video

சென்னை: கருணாநிதி போன்ற தலைவர்களை இழந்தது மிகப் பெரிய இழப்பாகும் என்று ஆம் ஆத்மி சோம்நாத் பார்தி தெரிவித்தார்.
கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது. "தெற்கில் உதித்தெழுந்த சூரியன்" என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சியானது சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆம் ஆத்மி கட்சியின் சோம்நாத் பார்தி பேசுகையில் கெஜ்ரிவாலின் அன்புடன் கருணாநிதி நினைவேந்தலில் பங்கற்கிறேன். 80 வருட நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டவர் கருணாநிதி.
அனைவருக்கும் மாபெரும் உதாரண புருஷராக திகழ்ந்தவர். அவரைப் போன்ற தலைவர்களை இழந்தது மிகப் பெரிய இழப்பாகும். தேசியக் கொடியை ஆகஸ்ட் 15-ம் தேதி முதல்வர்கள் ஏற்றும் உரிமையை வாங்கிக் கொடுத்தார்.
அவரது பங்களிப்பு தமிழகத்தையும் தாண்டி தேசிய அளவிலானது. உண்மையான பாரதப் புதல்வராக வாழ்ந்தவர் கருணாநிதி. வள்ளுவர், பெரியார், அண்ணாவின் கொள்கைப் படி வாழ்ந்தவர் கருணாநிதி.
இந்தப் பொறுப்பு தற்போது ஸ்டாலின் வசம் வந்துள்ளது. ஸ்டாலின் தனது பொறுப்புகளை சிறப்பாக செய்ய அனைவரும் வாழ்த்துவோம். கருணாநிதிக்கு பாரதரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட வேண்டும்.
மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்ததற்காக கருணாநிதிக்கு நன்றி சொல்ல வேண்டும். குடும்ப அரசியலை நாடு பார்த்துள்ளது. ஆனால் ஸ்டாலின் அப்படி அல்ல. ஸ்டாலின் ஒரு கட்சிக்காரராக இந்த அளவுக்கு உயர்ந்துள்ளார்.
கருணாநிதியின் மகனாக அவர் அரசியலில் உயரவில்லை. தமிழக மக்களுக்கு இது உணர்ச்சிகரமான நேரம் ஆகும். இதுவரை நீங்கள் நடத்திய அத்தனை போராட்டங்களுக்கும் ஆம் ஆத்மி துணை நிற்கும் என்றார் பார்தி.












Click it and Unblock the Notifications