கள்ளக்காதலனை அடித்து உதைத்த தந்தை.. வீட்டு சிறையில் வைக்கப்பட்ட அபிராமி.. திடுக் தகவல்கள்!
கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவரவே சுந்தரத்தை அபிராமியின் தந்தை அடித்து உதைத்துள்ளார்.
Recommended Video

சென்னை: கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவரவே சுந்தரத்தை அபிராமியின் தந்தை அடித்து உதைத்துள்ளார்.
பெற்ற குழந்தைகளை கொன்ற அபிராமியின் கள்ளக்காதல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளை கொன்றுவிட்டு கேரளா தப்பிசென்ற அபிராமியை அவரது கள்ளக்காதலனை வைத்தே நாகர்கோவிலில் கைது செய்தனர் போலீசார்.

2 மாதங்களுக்கு முன்பு
இந்நிலையில் அபிராமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, அபிராமிக்கும், பிரபல பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் (25) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நெருக்கம் ஏற்பட்டது.

படுக்கை வரை
இரண்டு மாத நெருக்கம் படுக்கை வரை சென்றுள்ளது. அபிராமியின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் சுந்தரம் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வது அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்துள்ளது.

சுந்தரத்துக்கு அடி உதை
இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் இரண்டு வீட்டாருக்கும் தெரியவந்ததால், அபிராமியின் தந்தை, சுந்தரத்தை அடித்து உதைத்துள்ளார். தனது மகளுடனான பழக்கத்தை கைவிடும்படி எச்சரித்துள்ளார்.

வீட்டுச்சிறை
பின்னர் மருமகனின் வீட்டிற்கு சென்ற அவரது தந்தை மகள் அபிராமிக்கு அறிவுரை அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து குடும்ப கவுரவத்தை காப்பாற்ற மகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே இருக்க வைக்கும்படி மருமகனிடம் கூறியுள்ளார் அபிராமியின் தந்தை.

காதில் வாங்காத அபிராமி
ஆனால் கள்ளக்காதல் மயக்கத்தில் இருந்த அபிராமி கணவர் கூறுவதையோ தந்தை கூறுவதையோ காதில் போட்டுக்கொள்ளாமல் சுந்தரத்துடன் வாழ வேண்டும் என்பதில் குறியாக இருந்துள்ளார்.

குழந்தைகள் கொலை
இதைத்தொடர்ந்து தான் வீட்டு சிறையில் வைக்கப்பட்டதாக கள்ளக்காதலன் சுந்தரத்திடம் அபிராமி கூறினார். இதனால் சுந்தரத்தின் ஆலோசனைப்படி கடந்த 30ம் தேதி இரவு இரண்டு குழந்தைகளை தூக்க மாத்திரை கொடுத்தும், மூச்சை நிறுத்தியும் கொலை செய்தார்.

கைது செய்த போலீஸ்
கணவரை கொலை செய்ய காத்திருந்தும், அது முடியாமல் போனதால் அங்கிருந்து தப்பினார். திருவனந்தபுரத்தில் பதுங்கியிருந்த அவரை கள்ளக்காதலன் மூலம் நாகர்கோவில் வரவழைத்து போலீசார் கைது செய்தனர்.

பாழாய் போன குடும்பம்
8 வருட காதல் திருமண வாழ்க்கையில் புயலாக வீசிய கள்ளக்காதலால் ஒரு குடும்பமே பாழாகி போயிருப்பது பெரும் வேதனையை எற்படுத்தியுள்ளது. 2 குழந்தைகளை கொன்று கணவரையும் கொல்ல காத்திருந்த அபிராமிக்கு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் 15 நாள் நீதிமன்றக் காவல் அளித்து உத்தரவிட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications