Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்காதலுக்காக மகளை கொல்ல என்ன மாத்திரை பயன்படுத்தியுள்ளார் இந்த அபிராமி பாருங்க...!!

கள்ளக்காதலுக்காக தனது 4 வயது மகளுக்கு பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை கொடுத்து அபிராமி கொலை செய்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மகளை கொல்ல அபிராமி பயன்படுத்திய மாத்திரை என்ன தெரியுமா?- வீடியோ

    சென்னை: கள்ளக்காதலுக்காக தனது 4 வயது மகளுக்கு பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை அதிகளவில் கொடுத்து அபிராமி கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் அபிராமி. திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்துடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இந்த விஷயம் குடும்பத்தினருக்கு தெரியவரவே கண்டித்துள்ளனர். இதனால் ஒரே அடியாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சுந்தரத்தின் வீட்டில் தங்கிவிட்டார்.

    வெளியில் செல்ல கட்டுப்பாடு

    வெளியில் செல்ல கட்டுப்பாடு

    இதனால் ஆத்திரமடைந்த அபிராமியின் அப்பா, அவரை அடித்து உதைத்து சுந்தரத்தின் விட்டில் இருந்து அழைத்து வந்து கணவருடன் சேர்த்து வைத்தார். மேலும் வெளியில் செல்லக்கூடாது என அவர்கள் கட்டுப்பாடு விதித்தனர்.

    30ஆம் தேதி இரவு

    30ஆம் தேதி இரவு

    இதனால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளது போல் உணர்ந்த அபிராமி தனது 7 வயது மகன், 4 வயது மகள் மற்றும் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக கடந்த 30ஆம் தேதி இரவு முதலே வேலையை தொடங்கினார் அபிராமி.

    4 வயது மகள் கொலை

    4 வயது மகள் கொலை

    அன்று இரவே மகள், மகன் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததாக கூறப்பட்டது. இதில் 4 வயது மகள் கார்னிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

    தூங்குவதாக சமாளிப்பு

    தூங்குவதாக சமாளிப்பு

    மகன் அஜயும் கணவர் விஜயும் உயிர் பிழைத்தனர். மறுநாள் முத்தம் அலுவலகம் செல்லும் முன்பாக மகளுக்கு முத்தம் கொடுக்க சென்ற கணவனிடம் மகள் அசந்து தூங்குவதாக கூறி சமாளித்து வெளியே வேலைக்கு அனுப்பினார் அபிராமி.

    மூச்சை திணறடித்து கொலை

    மூச்சை திணறடித்து கொலை

    கணவர் வேலைக்கு சென்ற பிறகு மகனை படுக்கை அறைக்கு அழைத்து சென்ற அபிராமி மூக்கு மற்றும் வாயை பொத்தி மூச்சை திணறடித்த கொன்றார்.

    கைது செய்த போலீஸ்

    கைது செய்த போலீஸ்

    கணவர் இரவு அலுவலகத்திலேயே தங்கியதால் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். இதைத்தொடர்ந்து கேரளாவுக்கு தப்பி சென்ற அபிராமியை கள்ளக்காதலனை வைத்து நாகர்கோவில் வரவழைத்து கைது செய்தது போலீஸ்.

    தூக்க மாத்திரை அல்ல

    தூக்க மாத்திரை அல்ல

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார். முதலில் குடும்பத்தினரை கொல்ல தூக்கமாத்திரை கொடுத்ததாக கூறிய அபிராமி தற்போது தான் கொடுத்தது தூக்கமாத்திரை அல்ல என அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்.

    பெண்கள் பயன்படுத்தும் மாத்திரை

    பெண்கள் பயன்படுத்தும் மாத்திரை

    அதாவது குழந்தைகளை கொல்ல தூக்க மாத்திரை எப்படி கிடைத்தது என போலீசார் அபிராமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தான் பயன்படுத்தியது தூக்க மாத்திரைகள் இல்லை எனவும் பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகள் எனவும் கூறியுள்ளார் அபிராமி.

    மகள் மட்டும் பலி

    மகள் மட்டும் பலி

    தன்னிடம் ஐந்து மாத்திரைகள் இருந்ததாகவும், அதிக அளவில் மாத்திரை சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படும் என நினைத்து பாலில் அதை கலந்ததாக கூறியுள்ளார். ஆனால், மகள் மட்டுமே உயிரிழந்ததாகவும் கணவருக்கும், மகனுக்கும் எதுவும் ஆகவில்லை என்றும் அபிராமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+