காதலுக்கு கண்ணில்லை.. கள்ளக்காதலுக்கு இதயமில்லை.. குழந்தைகளை கொன்று நிரூபித்த அபிராமி கைது
Recommended Video

நாகர்கோவில்: கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளையே கொன்ற குன்றத்தூர் அபிராமியை தனிப்படை போலீஸார் நாகர்கோவிலில் கைது செய்தனர்.
குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). இவர் தனியார் வங்கியில் வீடுகள் வாங்க கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி அபிராமி (25). இவர்களுக்கு அஜய், கார்னிகா என்ற இரு குழந்தைகள் இருந்தனர்.

கதவு திறக்குமாறு...
இந்நிலையில் விஜய் நேற்று முன் தினம்இரவு வங்கியில் பணி காரணமாக வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவர் நேற்று அதிகாலை வீட்டுக்கு சென்றார். அப்போது கதவை திறக்குமாறு மனைவிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

விசாரணை
இதையடுத்து அவர் கதவை தட்ட முயன்ற போது கதவு திறந்திருந்தது தெரியவந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது இரு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

பிரியாணி கடையில் கள்ளக்காதலன்
இந்நிலையில் வீட்டில் அபிராமியும் அவரது இரு சக்கர வாகனமும் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அபிராமியை தேடுவதற்காக தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். இதனிடையே அபிராமிக்கு குன்றத்தூர்- போரூர் நெடுஞ்சாலையில் பிரியாணி கடையில் பணியாற்றும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.

சுந்தரம் கைது
கள்ளக்காதலன் சுந்தரத்தை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் நாகர்கோவிலுக்கு அபிராமி தப்பி சென்றது தெரியவந்தது.

தாய் கைது
குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அபிராமியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு விரைந்தனர். இந்த நிலையில், விஷம் கலந்து கொடுத்து தனது 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி நாகர்கோவிலில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications