சூளகிரியில் பஸ் மீது கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி 7 பேர் பலி, 33 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பேருந்து மீது கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 33 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று மதியம் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னாறு என்ற இடத்தின் அருகே வந்த பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சின்னாறு பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பேருந்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் ஒரு பெண் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 33 பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறை, தீயணைப்புத்துறை மற்றும் போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் தவறினால் விபத்து ஏற்பட்டதாக அமைச்சசர் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications