செம்மண் கடத்திய லாரி... அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கத்து வீட்டில் புகுந்து விபத்து
சேலம்: சேலம் மாவட்டத்தில் செம்மண் கடத்திச் சென்ற லாரி ஒன்று, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டிற்குள் புகுந்து விபத்துக்குள்ளனது.
சேலம் மாவட்டம் பக்கநாடு, ஆடையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, செங்கல் சூளைகளுக்காக அதிகளவில் செம்மண் கடத்தப்படுவதாக புகார் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலுவம்பாளைம் வழியாக செம்மண் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சங்ககிரி அருகே உள்ள, காவேரிப்பட்டியை சேர்ந்த சேகர் (50) என்பவர் செம்மண் லாரியை ஓட்டி வந்துள்ளார்.

நள்ளிரவு 1 மணியளவில், சிலுவம்பாளையம் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, மின்கம்பத்தில் மோதி அர்த்தனாரி என்பவரின் வீட்டுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கத்து வீடுதான் அர்த்தனாரியின் வீடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தினால் அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications