நமீதா உடையை பற்றி ஆபாசமாக பேசிவிட்டு பரணியை வெளியே அனுப்பிய பிக்பாஸ் டீம்!
பிக்பாஸ் டீம் பரணி தவறான நடத்தைக்கொண்டவர் என்பது போல் சித்தரித்து வெளியே அனுப்பியுள்ளது.
சென்னை: நமீதாவின் உடையை பற்றி ஆபாசமாக பேசிய பிக்பாஸ் டீம் பரணி தவறான நடத்தைக்கொண்டவர் என்பது போல் சித்தரித்து வெளியே அனுப்பியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். வட இந்தியாவில் புகழ்பெற்ற இந்நிகழ்ச்சியை தமிழிலும் முயற்சித்துள்ளனர்.
அண்மையில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். தொடங்கிய நாள் முதலே இந்நிகழ்ச்சி குறித்து பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றன.

கட்டிப்பிடிக்க ஆள் இல்லை
நிகழ்ச்சி தொடங்கிய அன்றே சக போட்டியாளரான நடிகர் ஸ்ரீயிடம் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி என்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லை என கூறினார். இது தமிழக மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூகவளைதளங்களில் ஜூலியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.

கார்னர் செய்யப்பட்ட பரணி
இதையடுத்து சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நகர்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. ஆண்கள் டீமில் கஞ்சா கறுப்பு, சினேகன் ஆகியோரால் கார்னர் செய்யப்பட்டார் பரணி.

அடிக்க பாய்ந்த கஞ்சாகறுப்பு
ஒரு கட்டத்தில் தகாத வார்த்தையால் திட்டிய கஞ்சா கறுப்பு, நடிகர் பரணியை அடிக்க பாய்ந்தார். இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு தொற்றியது.

கஞ்சா கறுப்பை வெளியேற்றிய மக்கள்
இதையடுத்து எப்படியாவது பரணியை வெளியேற்ற வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர் கஞ்சா கறுப்பு மற்றும் அவரது சகாக்கள். இதற்காக பரணி பெயரை எவிக்ஷனுக்காக நாமினேட் செய்தனர்.

நீடித்த பரணி
ஆனால் மக்கள் வாக்களிக்காததால் கஞ்சா கறுப்பு வெளியேற்றப்பட்டார். பரணி பீக்பாஸ் வீட்டிலேயே நீடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

பரணியால் பாதுகாப்பில்லை
ஆனால் பரணியால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கஞ்சா கறுப்பு ஏற்கனவே கொளுத்தி போட்டது நேற்று கொழுந்துவிட்டு எரிந்தது. பரணி வெளியேற வேண்டும் என அவரை கார்னர் செய்து பிக்பாஸ் குடும்பத்தினர் ஸ்ட்ரைக் செய்தனர்.

தப்ப முயன்ற பரணி
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பரணி சுவர் ஏறிகுதித்து வீட்டில் இருந்து தப்ப முயன்றார். இதையடுத்து விதிகளை மீறியதாக அவர் வெளியேற்றப்பட்டார். அதுவரை அண்ணன் அண்ணன் என்று கூறி வந்த ஜூலியும் மற்றவர்களுடன் சேர்ந்து பரணி குறித்து தவறாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நமீதா உடைக்குறித்து ஆபாச பேச்சு
முந்தைய எபிசோடில் நமீதா உடுத்தியிருந்த உடையை வையாபுரி, கஞ்சா கறுப்பு, சினேகன் உள்ளிட்டோர் மிக கேவலமாகவும் ஆபாசமாகவும் பேசி கமெண்ட் அடித்தனர். ஆனால் அவர்கள் பரணி தவறானவர் என கஞ்சா கறுப்பு கூறியதை வைத்து ஓரம் கட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications