ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட்... நடிகர்கள் ரஜினி, கமலிடம் ஒப்புதல்... நடிகர் கார்த்தி தகவல்
வரும் ஜனவரி மாதம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என்று நடிகர் கார்த்தி அறிவித்தார்.
சென்னை : வரும் ஜனவரி மாதம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் கார்த்தி தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில், மூத்த மற்றும் முன்னணி திரைப்பட , நாடக நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நடிகர் கார்த்தி பேசுகையில், வரும் ஜனவரியில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படும். இதற்காக நடிகர்கள் கமல், ரஜினியிடம் ஒப்புதல் பெற்று விட்டோம். அறங்காவல் குழுவிடம் ஒப்புதல் பெறப்படும்.
உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய முடியவில்லை.
ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பிறகு, நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியுதவியை காட்டிலும் செலவு அதிகமாகும் என்றார் கார்த்தி. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வசதியாக, நடிகர் சங்கத்தின் வேண்டுகோள் படி இன்று சினிமா படப் பிடிப்புகள் ரத்து செய்து, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications