அம்மா நல்லாருக்காங்க, நலமுடன் வீடு திரும்பி பணியை தொடங்குவார் - நடிகர் பிரபு
முதல்வர் ஜெயலலிதா நலமாக உள்ளார். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று நடிகர் பிரபு கூறியுள்ளார்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 47 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க நாள்தோறும் அரசியல் கட்சித்தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் அப்பல்லோவிற்கு நேரில் சென்று நலம் விசாரித்து செல்கின்றனர்.
முதல்வரின் உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக நடிகர் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு ஆகியோர் இன்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள், மருத்துவர்களிடம் முதல்வரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரையிடம் முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரபு, முதல்வர் ஜெயலலிதா, பூரண உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்றும், வழக்கம் போல், தமது பணிகளை அவர் திறம்பட செய்வார் என்றும், மக்களின் பிரார்த்தனையால் அவர் நலமடைந்துள்ளதாகவும் கூறினார். முதல்வர் விரைவில் நலமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று நானும் பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.
Our Legendary prabhu Family Entry in Apollo Hospital & Amma Will recovery Soon pic.twitter.com/kq58Ibqgty
— Diamond Babu (@diamondbabu4) November 7, 2016
பொன்னையன் பேட்டி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னும் பதினைந்து நாட்களுக்குள் வீடு திரும்புவார் என்று அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 'இன்னும் பதினைந்து நாட்களுக்குள் முதல்வர் வீடு திரும்புவார். உடல்நிலை தொடர்பான முக்கிய காரணிகள் எல்லாம் சரியான அளவில் உள்ளன. தற்போதுஅவருக்கு பிசியோதெரபி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்றார். முதல்வரை தனியான அறை ஒன்றிற்கு மாற்றுவது தொடர்பாக மருத்துவர்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். முதல்வர் முழுமையாக குணம் அடைந்து வீட்டிற்கு திரும்ப வேண்டும் எனபதுதான் அனைவரின் விருப்பமாகும் என்றும் பொன்னையன் பதிலளித்துள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications