தோட்டாவுடன் ஏர் போர்ட்டுக்கு வந்த நடிகர் கார்த்திக்கின் அண்ணன்... கைதாகி விடுதலை
மதுரை: துப்பாக்கித் தோட்டாக்களை எடுத்து வந்ததற்காக நடிகர் கார்த்திக்கின் அண்ணனை மதுரை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
அக்னி நட்சத்திரம், அமரன் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகர் கார்த்திக். இவரது சகோதரர் கணேஷ் (57), நேற்று மாலை மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்தார்.
அங்கு மத்திய பாதுகாப்புப் படை போலீசார் நடத்திய சோதனையில், அவரது பையில் தோட்டா ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், தான் நடிகர் கார்த்திக்கின் சகோதரர் என்றும், போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டிற்குச் செல்வதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்தப்பை தன்னுடையதில்லை என்றும், உறவினருடையது என்றும் கூறிய அவர் அதில் தோட்டா இருப்பது தெரியாது என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கார்த்திக்கிற்கும் போனில் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசாரைத் தொடர்பு கொண்ட கார்த்திக், ‘அந்த பை என்னுடையது; துப்பாக்கி, தோட்டாக்களுக்கு உரிமம் உள்ளது' என விளக்கமளித்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், ஆவணங்களின்றி தோட்டா எடுத்து வந்ததற்காக கணேஷைப் பெருங்குடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் இரவு விமானத்தில் சென்னை புறப்பட்டுச் சென்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications