ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு... மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் குடும்பத்தோடு சிம்பு மவுனப் போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு தனது வீட்டின் முன்பு மவுன போராட்டம் நடத்தினார். அவரது வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு இன்று மாலை தனது வீட்டின் முன்பு குடும்பத்துடன் மவுன போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டத்தில் ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று மாலை 5 மணிக்கு தனது வீட்டின் முன்பு 10 நிமிடம் நின்று மவுன போராட்டம் நடத்தப் போவதாக நேற்று அறிவித்தார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழர்கள் தங்கள் வீட்டின் முன்பு 10 நிமிடம் மவுனமாக நின்று மவுன போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி நடிகர் சிம்பு தியாகராய நகரில் உள்ள தனது வீட்டு வாசலில் தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா உட்பட குடும்பத்தினருடன் கறுப்பு நிற ஆடை அணிந்து மவுன போராட்டம் நடத்தினார். சிம்பு வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்களும் கறுப்பு சட்டை அணிந்தபடி மவுன போராட்டம் நடத்தினர்.
அவர்கள் கைகளில் கறுப்புக்கொடியுடன் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி அமைதி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
@iam_str தலைவா 🙌🙌👏💪 #StandAsTamilan#UnityForJallikattu5PmJan12 #STRForJallikattu pic.twitter.com/lvv6pEeo43
— ❤ நவீன் உயிர் STR ❤ (@de7456bc26b0464) January 12, 2017
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications