நடிகர் சிம்பு தலைமறைவாக இல்லை: சிம்புவின் வழக்கறிஞர் விளக்கம்
சென்னை: நடிகர் சிலம்பரசன் தலைமறைவாக இல்லை என அவரது வழக்கறிஞர் தியாகேஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் யூடியூப்பில் வெளியாகிய பீப் பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியதாகவும் அதற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்தாகவும் கூறப்படுகிறது. பீப் பாடல் விவகாரத்தில் நாள்தோறும் சிம்புவிற்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் நடிகர் சிம்புவை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக சென்னை காவல் துறையினர் தெரிவித்து இருந்னர். தமிழ்நாட்டில் சிம்பு இல்லை என்பதால் கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் போலீசார் தங்களது தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவை கைது செய்ய போலீஸ் தீவிரமாக இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக விமான நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிம்பு வழக்கறிஞர் தியாகேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர கூறுகையில், சிம்பு தலைமறைவாக இல்லை. இதுவரை சிம்புவை தேடியோ, கைது செய்யும் நடவடிக்கையிலோ இதுவரை யாரும் வரவில்லை. பீப் பாடலை யூடியூபில் வெளியிட்டவர் மீது முறையாக வழக்குகள் பதியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications