நடிகர் சங்க கட்டடத்தில் முதல் திருமணம் விஷாலுக்கு... வாழ்த்திய விஜயகுமார்
தென்னிந்திய நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய விஜயகுமார், கட்டடம் திறக்கப்பட்ட உடன் முதலில் விஷால் திருமணம் நடைபெறும் என்று நடிகர் விஜயகுமார் வாழ்த்தினார்.
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவில் வாழ்த்தி பேசிய விஜயகுமார் கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்ற பின்னர் முதல் திருமணம் விஷாலுக்கு நடைபெற வாழ்த்துக்கள் என்று கூறினார்.
நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டிய பின்னர் அதில் தனது திருமணம் நடைபெறும் என்று கூறி வந்தார் விஷால். அதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டார் விஷால்.
தியாகராய நகரில் ரூ.26 கோடி செலவில், நான்கு மாடிகளுடன்கூடிய நடிகர் சங்கத்துக்குப் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இந்தப் புதிய கட்டடத்தில், நடிப்புக்கான பயிற்சிக் கூடம், ஜிம், தியேட்டர் உள்ளிட்டவை கட்டப்பட உள்ளன.

அடிக்கல் நாட்டு விழா
நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதல் செங்கல்லை, நடிகர் நாசர், விஷால் எடுத்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து பேசிய விஷால், எங்களை யாரும் தடுக்க முடியாது ஏறி மிதித்து கொண்டு பயணம் செய்வோம் என்றார். 2018ஆம் ஆண்டு நடிகர் சங்க கட்டடம் திறப்பு விழா நடைபெறும் என்று கூறினார்.

விஜயகுமார் பேச்சு
சரத்குமார் அணியில் இருந்த நடிகர் விஜயகுமார், இன்றைய அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகுமார், பொறுப்புகளுக்கு இளைஞர்கள் வரவேண்டும் என்றார். பெரியவர்கள் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

விஷால் வெற்றி பெறுவார்
நடிகர் சங்க கட்டடம் கட்டும் முயற்சியை விஷால் தொடங்கி விட்டார் அதற்கான முயற்சியில் அவர் வெற்றி பெறுவார் என்று கூறினார். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றும் கூறினார்.

விஷால் திருமணம்
நடிகர் சங்கக் கட்டடம் கட்டிய பின்னர் திருமணம் செய்து கொள்வேன் என்று விஷா ல் கூறி வருகிறார். கட்டடம் அடுத்த ஆண்டு திறப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் திருமணம் அந்த கட்டடத்தில் விஷாலுக்கு நடைபெற வாழ்த்துக்கள் என்று விஜயகுமார் வாழ்த்தினார்.












Click it and Unblock the Notifications