விஷாலுக்கு திடீர் சுகவீனம்.. ஆளுநரைச் சந்திக்கும் திட்டம் ரத்து!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திப்பதற்காக நேரம் கேட்டுவிட்டு பின்னர் அந்த சந்திப்பை விஷால் ரத்து செய்துவிட்டார்.
Recommended Video

சென்னை : தமது வேட்புமனு நிராகரிப்பு தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹதித்தை சந்திப்பதற்காக நேரம் கேட்டுவிட்டு பின்னர் உடல்நல பாதிப்பு காரணமாக அந்த சந்திப்பை விஷால் ரத்து செய்துவிட்டார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த வேட்புமனு முன்மொழிந்தவர்கள் 2 பேர் தங்களது கையெழுத்து இல்லை என்றதால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் விஷால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவரது மனு ஏற்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சில மணிநேரங்களிலேயே அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விஷால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்தார்.
இதன்பின்னர் இந்திய தேர்தல் ஆணையத்தில் தனது வேட்புமனுவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். ஆனால் தேர்தல் ஆணையமோ தேர்தல் அதிகாரி எடுத்த முடிவே இறுதியானது என்று தெரிவித்துவிட்டது.
பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் முறையிட விஷால் நேரம் கேட்டிருந்தார். அவருக்கு இன்று நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தனக்கு திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக கூறி ஆளுநருடனான சந்திப்பை விஷால் ரத்து செய்துவிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications