அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமலுக்கு நடிகர் விவேக் பாராட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு டுவிட்டரில் தமது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில தினங்களாக தமிழக அரசை விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் அவர் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தார். நேற்று முந்தைய தினம் சென்னையில் நடிகர் கமல்ஹாசனை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சந்தித்தார்.

Actor Vivek praises Kamalhassan for his political entry

இந்நிலையில் தனியார் தொலைகாட்சி சேனலுக்கு நடிகர் கமல் கூறுகையில், இது ஒரு கட்டாய திருமணம். இந்த கட்டாய திருமணத்தில் மணமகள், தமிழக மக்கள்தான். இந்த திருமணத்திலிருந்து வெளியேற மக்கள் விரும்புகிறார்கள். இன்னும் 100 நாட்களில் தேர்தல் நடைபெறுமானால், நான் களத்தில் இருப்பேன் என்றார்.

இதற்கு பாராட்டு தெரிவித்து நடிகர் விவேக் தனது டுவிட்டரில் அடுத்தடுத்த பதிவுகளில் குறிப்பிடுகையில், அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல்!அவர் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன்.இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் சார்பில் வாழ்த்துகிறேன்! என்றார்.

இதைத் தொடர்ந்து அடுத்த பதிவில் விவேக் குறிப்பிடுகையில் வருவது யாராக இருப்பினும், வாழ்த்துவது மரபாக இருப்பினும்,மகுடம் தரிக்க வைப்பது மக்களே! என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Vivek praises Kamalhassan for his political entry. He shared his views in his twitter account.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற