விறுவிறுப்பான நடிகர் சங்கத் தேர்தல்.. வாக்களிக்க குவிந்த நட்சத்திரங்கள்
சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல் போல விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஊரில் உள்ள எல்லா மீடியாக்களும் தேர்தல் செய்தியை சேகரிக்க குவிந்துள்ளன.
பரபரப்பான தேர்தல் களத்திலிருந்து நேரடி தகவல்கள்...
-நடிகர் சங்கத் தேர்தலில் இதுவரை 2435 வாக்குகள் பதிவு
-மொத்த தபால் வாக்குகள் 783
-நேரடியாக வந்து வாக்களித்தவர்கள் 1652
-வாக்குகள் மாலை 6 மணியளவில் எண்ணப்படும் - தேர்தல் அதிகாரி பத்மநாபன்
-இதுவரை 1500 ஓட்டுகள் பதிவாகியுள்ளன: சரத்குமார்
-வடிவேலு தான் காமெடியனாச்சே பாஸ்... : சரத்குமார்
-விஷால் தாக்கப்பட்டதாக வடிவேலு கூறியிருந்தார்
-விஷால் நல்ல நடிகர், அதனால் சீன் கிரியேட் செய்து விட்டார்: சரத்குமார்
-வெற்றி, தோல்வி அனைவருக்கும் பொதுவானது: சரத்குமார்
-சீனியரை தவறாக பேசியதால் பிரச்சினை ஏற்பட்டது: சரத்குமார்
-மோகன் வாக்கு முன்னதாகப் பதிவு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும்: சரத்குமார்
-வாக்குப்பட்டியல் நீதியரசால் சரிபார்க்கப்பட்டது: சரத்குமார்
-போர் போன்ற சூழலை உருவாக்கி, பாதுகாப்பு கேட்டது எதிரணி: சரத்குமார்
-எந்தவொரு கைகலப்பும் நடக்கவில்லை: சரத்குமார்
-விஷாலை நான் தாக்கவில்லை: சரத்குமார் விளக்கம்

-காலை முதல் சிறப்பாக வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது: சரத்குமார்
-அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடந்ததே சலசலப்பிற்குக் காரணம்: சரத்குமார் விளக்கம்
-விஷாலை மட்டுமல்ல யாரையும் தாக்கும் எண்ணம் எனக்கில்லை: சரத்குமார்
-விஷால் கன்னத்தில் முக்கிய நடிகர் ஓங்கி பளார் என அறைந்ததாக பரபரப்புத் தகவல்
-நடிகை சங்கீதாவை முக்கிய நடிகர்கள் இருவர் அசிங்கம் அசிங்கமாக திட்டியதாக சர்ச்சை
-தன்னைப் பார்த்து கேள்வி கேட்ட சங்கீதாவை முக்கிய நடிகர் அசிங்கமா பேசியதாக விஷால் தரப்பு புகார்
-சங்கீதாவை அசிங்கமாக பேசியதால்தான் விஷால் கோபத்துடன் தலையிட்டதாகவும் தகவல்
-விஷாலை யாரும் தாக்கவில்லை: ராம்கி
-தேர்தல் சுமூகமாக நடந்து வருகிறது
-அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடந்ததால் சலசலப்பு: சரத்குமார் விளக்கம்
-அவரவர் கருத்துக்களை சொல்வதால் பிரச்சினை இல்லை - விஜயகாந்த்
-இதை விடவும் முக்கியமான பிரச்சினைகள் நாட்டில் இருக்கின்றன- விஜயகாந்த்
-நகைச்சுவை நடிகர் கவுண்டமணி வாக்களித்தார்
-நடிகர் சங்கம் என்று பெயர் இருந்தால் போதும் - கவுண்டமணி
-என்ன நடந்தாலும் தேர்தலை நிறுத்த முடியாது: விஷால்
-தேர்தலை நிறுத்த எதிரணியினர் சதி: விஷால்
-முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் வாக்களித்தார்
-வாக்குச்சாவடிக்கு முன்னாள் இரு அணியினரும் ஒற்றுமையுடன் நிற்கின்றனர்
-நடிகர்கள் விஜயகுமார், பொன்வண்ணன், கார்த்தி அமைதியை நிலைநாட்ட முயற்சி
-விஷாலின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்
-உறுப்பினர்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் - வடிவேலு
-முழு முயற்சியுடன் தேர்தலை நிறுத்த எதிரணியினர் சதி - வடிவேலு
-நடிகராக நடந்து கொள்ளுங்கள் ரவுடித்தனம் வேண்டாம் - வடிவேலு கோரிக்கை
-கலவரம் செய்பவர்களை ஊடகங்கள் போட்டுக் காட்டவேண்டும் - வடிவேலு
-நடிகர் அல்லாத ஒருவர் தன்னைத் தாக்கியதாக தனியார் தொலைக்காட்சிக்கு விஷால் பேட்டி
-உள்ளே பெரிய சண்டை நடைபெறவில்லை - கோவை சரளா தகவல்
-கள்ள ஓட்டுப் போடப் படுவதாக கோவை சரளா குற்றச்சாட்டு
-விஷால் அணியைச் சேர்ந்தவர் கோவை சரளா
-அடிதடிக்கு மத்தியிலும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது
-தேர்தலில் முறைகேடு நடப்பதாக விஷால் அணி புகார்
-தேர்தலை நிறுத்த கோரிக்கை
-விஷாலை சரத்குமார் அடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் புகார்
-நடிகை சங்கீதாவை உள்ளே விட மறுப்பு
-சங்கீதாவை சரத்குமார் தாக்க முயன்றதாகத் தகவல்
-சங்கீதா மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது
-ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டதால் பரபரப்பு
-நடிகர் விஷாலும் தாக்கப்பட்டதாகத் தகவல்
-தள்ளுமுள்ளுவால் நடிகர் விஷால் மயக்கம்
-பாண்டவர் அணி அமோக வெற்றி பெறுவது உறுதி - வடிவேலு
-நடிகை ஒருவரை சரத் அணி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது
-வாக்குச்சாவடியை நோக்கி நடிகர், நடிகைகள் ஓட்டம்
-பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் உள்ளே சென்றனர்
-செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்க போலீசார் மறுப்பு
-நடிகர் சங்கத் தேர்தலில் திடீர் வன்முறை - வாக்குச் சாவடிக்கள் பெரும் அடிதடி
-சிம்பு, விஷால் இடையே கடும் மோதல் மூண்டதாக தகவல்
-போலீஸ் உள்ளே புகுந்து தடியடி
-போர்க்களமாக மாறியதால் நடிகர் சங்கத் தேர்தலில் திடீர் பரபரப்பு

-11 மணி நிலவரப்படி 800 வாக்குகள் பதிவு - தேர்தல் அதிகாரி பத்மநாபன்
-நடிகர் சிம்பு தந்தை டி.ராஜேந்தருடன் வந்து வாக்களித்தார்
-தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றினால் நல்லதுதான் - சிம்பு
-சிலம்பரசன் ஒரு உண்மையான தமிழன் -டி.ராஜேந்தர்
-வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை - டி.ராஜேந்தர்
-கூவத்தை விட மோசமானதாக இருந்தது நடிகர் சங்க பிரச்சாரம் - பார்த்திபன்
-வெற்றிபெற்ற அணி மற்ற அணி ஏன் தோல்வியுற்றது என்பதை யோசிக்க வேண்டும் - பார்த்திபன்
-அவ்வாறு யோசித்தால் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது - பார்த்திபன்
-இது தேர்தலா என்பதே எனக்குச் சந்தேகமாக உள்ளது: நாசர்
-திருவிழா போல் இருக்கிறது: நாசர்
-உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட வாக்களிக்க வருவது மகிழ்ச்சி: நாசர்
-ரஜினியின் கோரிக்கை குறித்து பின்னர் ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்: நாசர்
-நடிகர் சங்கத் தேர்தல்: மாற்றம் இருக்கும்...ஏமாற்றம் இருக்காது - பாபிலோனா
-நடிகர் சங்கத் தேர்தல் நடிகர் பிரசாந்த் தந்தை தியாகராஜனுடன் வந்து வாக்களித்தார்
-சந்தா கட்ட முடியாத உறுப்பினர்களை நீக்காமல், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் - தியாகராஜன்
-யார் வென்றாலும் நல்லது நடக்க வேண்டும் - பிரசாந்த்
-நடிகர் சங்கத்திற்கு ஜனநாயக முறையில் முதன்முறையாக தேர்தல் நடைபெறுவது மகிழ்ச்சி: சுந்தர்.சி
-இப்படி தேர்தல் நடப்பது தான் அனைவருக்கும் நல்லது: சுந்தர்.சி
-நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் கட்சியில் இல்லாமல் இருப்பது நல்லது: சுந்தர்.சி
-நடிகர் சங்கமானது அரசியல் சார்ந்து இருக்கக்கூடாது: சுந்தர்.சி
-ஒவ்வொருவரின் ஓட்டும் முக்கியமானது - சுகன்யா
-தேர்தலில் ஒற்றுமை இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது - சுகன்யா
-நடிகர் சங்கம் சங்கமமாக மாற வேண்டும் - சுகன்யா
-நடிகர் சங்க தேர்தலுக்கு வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு
-நடிகர்கள் ஓட்டுப் போடுவதற்காக பணத்தை வாரியிறைத்து பாதுகாப்பு கொடுக்கும் தமிழக அரசு
-2 இணை ஆணையர்கள், 8 துணை ஆணையர்கள் தலைமையில் கிட்டத்தட்ட 1000 போலீஸ் பாதுகாப்பு
-மக்கள் வரிப்பணத்தில் நடிகர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் போலீஸ்
-மீடியாக்களுக்கு சுத்தமாக மரியாதை இல்லை.. உள்ளே நுழையக் கூட அனுமதிக்காமல் பயங்கர கெடுபிடி
-பாதுகாப்பு என்ற பெயரில் கெடுபிடி செய்யும் போலீஸ்
-கடுமையாகப் போராடிய பின்னரே குறிப்பிட்ட தூரம் வரை செல்ல மீடியாக்களுக்கு அனுமதி
-அடையாள அட்டை இல்லாமல் ஓட்டுப் போட வந்த அம்பிகா, ராதா
-அனுமதிக்க மறுத்த போலீஸாருடன் கடும் வாக்குவாதம்
-கடும் வாதத்திற்குப் பின்னர் அடையாள அட்டை இல்லாமலேயே ஓட்டுப் போட அனுமதி
-நடிகர் சங்க முன்னாள் தலைவர் விஜயகாந்த் வாக்களிக்க வருகை
-நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க தனது பெயர் விடுபட்டுள்ளது: மூத்தநடிகை சச்சு புகார்
-முறையாக ஆண்டு சந்தா செலுத்தியும் எனது பெயர் விடுபட்டுள்ளது: சச்சு
-தேர்தலுக்குப் பின் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்: கமல்
-பல பெரியவர்கள் ஆசையுடன் எழுப்பியது நடிகர் சங்கம்: கமல்
-தென்னிந்திய நடிகர்கள் சங்கம் இந்திய நடிகர்கள் சங்கமாக மாற வேண்டும்: கமல் விருப்பம்

-நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்தார் கமல்
-சூர்யாவும், ஜோதிகாவும் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்
-தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும்: கார்த்திக்
-நடிகர் சங்கத் தேர்தல்: கெளதமியுடன் வந்து கமல்ஹாசன் ஓட்டுப் போட்டார்
-நடிகர் சங்கத் தேர்தல் : வாக்குப்பதிவு செய்ய கமல், கவுதமி வருகை
-வெற்றி பெறும் அணியே ரஜினியின் கோரிக்கையை பற்றி முடிவு செய்யும்: குஷ்பு
-வெற்றி நல்ல அணிக்கே வந்து சேரும்: குஷ்பு நம்பிக்கை
-9 மணிவரை 350 வாக்குகள் பதிவு - தேர்தல் அதிகாரி
-தேர்தல் முடிவுக்குப் பின் சண்டை மறைந்து சமாதானம் உண்டாகும் - ராம்கி
-அக்கா, தங்கச்சி சண்டை போலத்தான் இதுவும் - அம்பிகா, ராதா
-தேர்தலில் யார் ஜெயித்தாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துகள் - சத்யராஜ்
-தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக உரிமை, வாக்களித்துள்ளேன் - நடிகை லட்சுமி
-பொதுவானவர்களுக்கே எனது ஓட்டு - நடிகர் செந்தில்
-நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றுவதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளன- எஸ்.வி.சேகர்
-பெயரை மாற்ற வேண்டுமானால் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் - எஸ்.வி.சேகர்
-"தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்" - ரஜினி கோரிக்கைக்கு பிரபு வரவேற்பு
-சங்கத்தின் பெயரை மாற்றுவதை விட மேம்பாடுதான் முக்கியம் - கார்த்திக்
-முதல் முறையாக வாக்களிக்க வந்த நடிகர், நடிகையர் உற்சாகம்
-வாக்களிக்க ஆர்வத்துடன் வருகை
-வாக்களிக்க வந்த அம்பிகா, ராதா
-ஓட்டுப் போட வந்த நடிகர், நடிகையரைப் பார்த்து ரசிக்க கூடிய மக்கள் கூட்டம்
-நடிகர் சங்கத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
-தொடங்கியது நடிகர் சங்கத் தேர்தல்,,, ராதாரவி வாக்களித்தார்!












Click it and Unblock the Notifications