அந்த நடிகர் என்னை ரகசிய திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்: நடிகை ஹேமலதா புகார்
சென்னை: நடிகர் இளையராஜா தன்னை காதலித்து ரகசிய திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாக நடிகை ஹேமலதா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார்.
சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அஷ்டலட்சுமி நகரில் வசித்து வரும் நடிகை ஹேமலதா(32) என்பவர் வியாழக்கிழமை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து நடிகர் இளையராஜா மீது புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கலைச் சேர்ந்தவள். நான் 3 தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறேன். ஹைதராபாத்தில் எடிட்டிங் ஸ்டுடியோ வைத்துள்ளேன். சினிமா மற்றும் விளம்பர படங்களை தயாரித்து வருகிறேன். நடிப்பு, எடிட்டிங் ஸ்டுடியோ மூலம் சம்பாதித்ததை எல்லாம் சினிமா படத்தை தயாரித்து இழந்து நிற்கிறேன்.
என்னை விட வயது குறைவான இளையராஜா என்ற நடிகர் என்னை காதலிப்பதாக தெரிவித்தார். முயல் என்ற படத்தில் நடித்துள்ள அவர் தற்போது அண்டாவை காணோம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நான் ஏற்கனவே காதல் பிரச்சனையில் சிக்கியுள்ளேன் இது எல்லாம் வேண்டாம் என்றேன். ஆனால் இளையராஜாவோ தனது காதலை ஏற்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்றார். அதனால் அவரை காதலித்தேன். யாருக்கும் தெரியாமல் வீட்டில் உள்ள பூஜை அறையில் எனக்கு தாலி கட்டினார். கணவன், மனைவியாக வாழ்ந்ததில் நான் கர்ப்பமானேன். சினிமாவில் பெரிய ஆளாக வரும் வரை குழந்தை வேண்டாம் என்று கூறி கருவை கலைக்குமாறு கூறினார். நானும் அவ்வாறே செய்தேன்.
கருவை கலைத்த பிறகு என்னை ஒதுக்கிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய தயாராகிவிட்டார். அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அவரை என்னுடன் சேர்த்து வைக்குமாறு போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.
-
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இளையராஜாவை பிறந்தநாளில் சந்தித்த மாரி செல்வராஜ் உருக்கம்.. சிஎம் விஜய் பற்றி ஒரே வார்த்தையில் பதில் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
83 வயதில் இசைஞானி இளையராஜாவின் காப்பி ரைட்ஸ் போராட்டம்.. இளைஞர்கள் அறிய வேண்டிய பாடம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications