அப்பல்லோவுக்கு போகும்போது என்னையும் கூட்டிட்டு போங்க.. ஆறுமுகசாமி கமிஷனில் தீபா மனு!
ஆறுமுகசாமி கமிஷனில் தம்மையும் மனுதாரராக சேர்க்கக்கோரி தீபா மனு அளித்துள்ளார்.
சென்னை: ஆறுமுகசாமி கமிஷனில் தம்மையும் மனுதாரராக சேர்க்கக்கோரி தீபா மனு அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக சசிகலா, ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களிடம் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் ஆறுமுக சாமி கமிஷன் விசாரித்து வருகிறது. ஜெயலலிதா, சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் என யாரையும் விட்டு வைக்காமல் சம்மன் அனுப்பி வருகிறது விசாரணை ஆணையம்.

பரபரப்பை கிளப்பிய தீபா
இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மக்களின் கவனத்தை பெற்ற அவரது அண்ணன் மகள் தீபா, தனது அத்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

ஆட்சியாளர்களும் உடந்தை
தனது அத்தை மரணத்திற்கு சசிகலா குடும்பம்தான் காரணம் என பகீரங்கமாக குற்றம்சாட்டினார் தீபா. பின்னர் தமிழக ஆட்சியாளர்களும் உடந்தை எனக்கூறி பீதியை கிளப்பினார்.

அப்பல்லோவில் ஆய்வு
இந்நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி வரும் 29ஆம் தேதி அப்பல்லோவில் ஆய்வு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

என்னையும் கூட்டிட்டு போங்க
இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தம்மையும் மனுதாரராக ஏற்க ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா மனு அளித்துள்ளார். அப்பல்லோவில் விசாரிக்க செல்லும்போது தம்மையும் அழைத்து செல்லுமாறு தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications