கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீன் மனு... 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது மகிளா நீதிமன்றம்!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், பள்ளியின் தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்து விழுப்புரம் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து, மரணத்திற்கு நீதிகேட்டு பெற்றோர், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், சம்மந்தப்பட்ட அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்து, வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தையே உலுக்கிய இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், வீடியோ ஆதாரங்களை கொண்டும், சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் கலவரத்தில் கைது செய்து வருகின்றனர். வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை சிபிசிஐடி காவலில் எடுத்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் ஆய்வாளர் தனலட்சுமி உள்ளிட்ட போலீசார் விசாரணை செய்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறைக்கு கொண்டு சென்றனர்

இந்நிலையில் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் ஸ்ரீ சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை ஜாமீன் கோரி, கடந்த 28 தேதி மனு செய்தனர். இந்த மனு மீது விசாரணை இன்று விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் வழக்கு விசாரணை வரும் 10 ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மகிளா நீதிமன்ற நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஜாமின் வழங்க கூடாது என உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வி மற்றும் தாய்மாமன் செந்தில் முருகன் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications