ஆர்எஸ்எஸ் பேரணியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைப்பதா? அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கொந்தளிப்பு!
ஆர்எஸ்எஸ் பேரணியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைப்பதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் குறித்து அவர் எந்த பதிலும் கூறாதது ஏன் என்று அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை : ஆர்எஸ்எஸ் பேரணியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைப்பது ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு செய்யும் துரோகம் என்று அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்ட தினம் ஆண்டுதோறும் நாடு முழுவதும் ஊர்வலங்களாக நடத்தப்படுகின்றன. இதன்படி மதுரையில் அக்டோபர் 8ம் தேதி காலை 5 மணியளவில் மதிச்சியம் இராமராயர் மண்டபத்தில் இருந்து ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைப்பார் என்று விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அதிமுகவின் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களான கருணாஸ், தனியரசு, தமிமும் அன்சாரி உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ் பேரணியை தமிழக அமைச்சர் தொடங்கி வைப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மூவரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ஆர்எஸ்எஸ் பேரணியை அமைச்சர் தொடங்கி வைப்பதாக செய்யப்படும் விளம்பரத்திற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ மறுப்பு தெரிவிக்காதது ஏன் என்று கேட்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைப்பது எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம் என்றும் அவர்கள் கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications