காலையில் எடப்பாடி.. தினகரனுக்கு ஆதரவு.. அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் சந்திப்பு.. மூவர் அணி பிசி!
சென்னை : பேரறிவாளனை பரோலில் விடுவிக்க சட்டசபையில் குரல் கொடுத்தற்காக அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற பேரறிவாளன் சுமார் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்று பேரறிவாளன் மற்றும் அவரது தாயர் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கடந்த சட்டசபை கூட்டத்தின் போது தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்குமாறு சட்டசபை கூட்டத்தின் போதே 2 முறை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 3 எம்எல்ஏக்களும் சந்தித்து ஆதரவு கோரினர். இந்நிலையில் கடந்த வாரம் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் கொடுக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் ஜோலார்பேட்டை அருகில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். பேரறிவாளனை பலரும் சந்தித்து சென்று வருகின்றனர்.

இந்நிலையில் பேரறிவாளனை பரோலில் விடுவித்ததற்காக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் நன்றி தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினையும் அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications