For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பூரில் அதிமுக அம்மா கட்சி எம்எல்ஏ மேற்கொண்ட உண்ணாவிரதம் திடீர் வாபஸ்! செல்போனில் மிரட்டலா?

அரசுக்கு எதிராக திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக அம்மா கட்சியின் எம்எல்ஏ மேற்கொண்ட திடீர் உண்ணாவிரதம் விரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

திருப்பூர்: அரசுக்கு எதிராக திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக அம்மா கட்சியின் எம்எல்ஏ குணசேகரன் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டிந்தார். அவருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்ததையடுத்து அவர் அவசர அவசரமாக தனது உண்ணாவிரத போராட்டத்தை கைது விடுவதாக கூறி கிளம்பிச் சென்றார்.

திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக அம்மா கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் குணசேகரன். அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தன்னால் திறம்பட செயல்பட முடியவில்லை என குற்றம்சாட்டினார். மக்கள் பிரச்சனைக்காக கலெக்டர் உட்பட அனைத்து அதிகாரிகளிடமும் பேசியுள்ளதாக கூறிய அவர், அமைச்சர்கள் உத்தரவிட்டாலும் அரசு அதிகாரிகள் சரியாக செயல்படுவதில்லை என தெரிவித்தார்.

மக்கள் எதிர்ப்பை மீறி மதுக்கடைகளை அமைக்க அதிகாரிகள் முயற்சி செய்வதாகவும், மக்கள் எதிர்ப்பில்லாத இடங்களில் மதுக்கடைகளை அமைக்கக்கூறியும் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் மக்கள் பணியை தன்னால் செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

காலை முதல் உண்ணாவிரதம்

காலை முதல் உண்ணாவிரதம்

குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். திருப்பூர் குமரன் நினைவகம் அருகே அ.தி.மு.க. அம்மா கட்சியின், எம்.எல்.ஏ., குணசேகரன் உண்ணாவிரத போராட்டத்தில் காலை முதல் ஈடுபட்டு வந்தார்.

செல்போனில் வந்த அழைப்பு

செல்போனில் வந்த அழைப்பு

அரசு அதிகாரிகளை கண்டித்து அதிமுக எம்எல்ஏ மேற்கொண்டிருந்த இந்த உண்ணாவிரதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிறிது நேரத்திற்கு முன் அவருக்கு செல்போன் மூலம் அழைப்பு வந்தது.

உண்ணாவிரதத்தை முடித்த எம்எல்ஏ

உண்ணாவிரதத்தை முடித்த எம்எல்ஏ

அதன்பின்னர், தனது கோரிக்கையை அரசு ஏற்று கொண்டதாகவும், உண்ணாவிரதத்தை முடித்து கொள்வதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் கொடுத்த ஜூசை குடித்து தனது போராட்டத்தை முடித்துக்கொண்டர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எம்எல்ஏ குணசேகரனை, அதிமுக அமைச்சர்களும், மூத்த தலைவர்களும் கண்டு கொள்ளாததாலேயே அவர் உண்ணாவிரதம் இருந்ததாக அப்பதி மக்கள் தெரிவித்தனர்.

மக்கள் கேள்வி

மக்கள் கேள்வி

மக்களின் அடிப்படை தேவைகளுக்காக உண்ணாவிரதம் இருக்கும் அவர், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்தான். அவர், முதலமைச்சரை நேரில் சந்தித்து தனது தொகுதிக்கான நிதியை பெறலாம். அவர் அதை ஏன் செய்யவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பினர்.

'பர்சனல்' கோரிக்கை

'பர்சனல்' கோரிக்கை

மக்கள் பிரச்சனையை முன்னிறுத்தி வைத்து, வெளியில் சொல்ல முடியாத தனது கோரிக்கையை நிறைவேற்ற எம்எல்ஏ குணசேகரன் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினர் இதனால், உண்ணாவிரதம் இருந்த அவருக்கு செல்போனில் அழைப்பு வந்தது.

அணி மாறுவதாக மிரட்டல்

அணி மாறுவதாக மிரட்டல்

அதன்பின்னர், தனது போராட்டத்தை முடித்து கொண்டார். எம்எல்ஏ குணசேகரனின் இந்த திடீர் போராட்டம், அணி மாறுவதாக மறைமுகமாக ஆளுங்கட்சிக்கு அவர் மிரட்டல் விடுப்பதுபோல் தோன்றுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அவருக்கே வெளிச்சம்..!

அவருக்கே வெளிச்சம்..!

எதை எதிர்பார்த்து குணசேகரன் உண்ணாவிரதம் மேற்கொண்டு மறைமுகமாக அணி மாறும் மிரட்டல் விடுத்தார் என்பதும், அவருக்கு யாரிடமிருந்து செல்போன் அழைப்பு வந்தது என்பது அவருக்கே வெளிச்சம்...

English summary
ADMK Amma party Tirupur MLA Gunasekaran was keeping hunger strike in Tirupur. He was accusing that Government officials not responding properly. but now suddenly he got a phone call and vapused his hunger stirke.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X