ஓங்கி அடிச்சா.. பாக்குறியா பாக்குறியா....??
மதுரை: போஸ்டர் போடுவதிலும், அதில் வித்தியாசமான வாசகங்களை இடம் பெறச் செய்வதிலும் நமது திராவிடக் கட்சிகளுக்கு நிகர் அவர்கள்தான். இப்படியெல்லாம் வசனம் எழுத அவர்களுக்கு யார்தான் ஐடியா கொடுக்கிறார்களோ.. அப்படி இருக்கின்றன ஒவ்வொன்றும்.
ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தபோது விதம் விதமான வாசகங்களுடன் போஸ்டர் போட்டு தமிழகத்தின் மானத்தை அகில உலக அளவில் வாங்கிய பெருமைக்குரியவர்கள் அதிமுகவினர்.

காவிரியை வச்சுக்கோ அம்மாவைத் திருப்பிக் கொடு என்று கேட்டு காவிரி விவசாயிகளின் மனதில் ரத்தம் கசிய விட்டவர்கள் இந்த அரசியல்வாதிகள்.
இந்த நிலையில் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாகி விட்டார். விரைவில் முதல்வராகப் பதவியேற்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விதம் விதமாக தினுசு தினுசாக போஸ்டர்களைப் போட்டு பயமுறுத்தி வருகின்றனர் அதிமுகவினர்.
மதுரையில் நீதி தேவதைக்கு நீதி வழங்கிய நீதி மானே என்ற பெயரில் நீதிபதி குமாரசாமியை வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதே மதுரையில், சிங்கம்லே என்ற தலைப்பில் ஒரு போஸ்டர் போட்டுள்ளனர் அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஆதரவாளர்கள்
அதே கோஷ்டி அந்த சிங்கம் படத்தில் வரும் வசனத்தை உல்டா செய்து போட்டு இன்னும் உசுப்பேத்தியுள்ளது.
அந்த வசனம் இதுதான்..
"சிங்கத்தைக் காட்டுல பார்த்திருப்ப
கர்நாடக கோர்ட்டுல பார்த்திருப்ப
ஏன் பரப்பன அக்ரஹாரா சிறையில் கூட பார்த்திருப்ப
அது வெறித்தனமா வெளியேறி
தொகுதி வாரியா ஓட்டு வேட்டையாடி
பார்த்திருக்கியா.. பார்த்திருக்கிறியா...
அது ஓங்கி அடிச்சா 234 டன் வெயிட்டுவே...
எதிரியும் கிடையாது, எதிர்க்கட்சியும் கிடையாது
பார்க்கிறியா பார்க்கிறியா.. பார்ப்பவே!"
என்ன கொடுமை சாமி இது...!
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications