ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு.... சென்னை நோக்கி விரையும் அதிமுகவினர்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிமுகவினர் சென்னை நோக்கி விரைந்து வருகின்றனர்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுகவினர் சென்னை நோக்கி விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீர் சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவர் குணமடைந்து விட்டதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு மருத்துவக்குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் கூடிய அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா குணம் அடைய வேண்டி கண்ணீர் மல்க பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது குறித்த தகவல் அறிந்த பிற மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர். எனவே, அசம்பாவிதங்களை தடுக்க அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அறிந்து தூத்துக்குடியில் இருந்து உடனடியாக சென்னை திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications