ஆதி திராவிடர்கள் நலனை பாதுகாப்பதில் அதிமுக அரசு தோல்வி.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..
சென்னை : ஆதி திராவிட மக்களின் நலன்களை பாதுகாப்பதில் அ.தி.மு.க. அரசு தோல்வியடைந்துவிட்டதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆதி திராவிட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அவர்களுடைய நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று ஸ்டாலின் ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது..

ஆதி திராவிட மக்களின் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 18 சதவிகித நிதியில் வெறும் 2 சதவிகிதத்தை மட்டுமே தமிழக அரசு செலவு செய்துள்ளதாகவும் மீதி நிதியை வேறு பொதுவான திட்டங்களுக்கு செலவிடுவதாகவும் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் டாக்டர் பி.எல்.புனியா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஆதி திராவிட மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளில் தமிழ்நாடு,இந்தியாவிலேயே முதல் 5 மாநிலங்களுக்குள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் 6,074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில், 2014-ஆம் ஆண்டு மட்டும் இந்த சட்டத்தின் கீழ் 1,464 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல், 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் வரை பதிவாகியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 571. 2011-ஆம் ஆண்டு முதல் இதுவரை தமிழ்நாட்டில் 213 ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அந்த சமுதாய மக்களின் மீதான கொடுமைகளுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 70 சதவிகித வழக்குகள் ‘'ஆதாரம் ஏதும் இல்லை" என்று சொல்லி முடித்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் புனியா, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் நிரூபணம் ஆகி தண்டனை அளிக்கப்பட வழக்குகள் வெறும் 10 சதவிகிதம் தான் என்று வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும்,ஆதி திராவிட மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த பல்வேறு அம்சங்களை கண்காணிக்கும் முதல்வரின் தலைமையில் செயல்படும் மாநில அளவிலான மேற்பார்வை குழு 2013-க்கு பின் கூடவே இல்லை என்று தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார் புனியா.
அவரின் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும், தற்போதைய அதிமுக அரசு, ஆதி திராவிட மக்களின் நலனை பாதுகாப்பதில் தோல்வியடைந்து விட்டது என்பதையும், அவர்களின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் எதுவும் செய்யவில்லை என்பதையும் தெளிவாக நிரூபணம் செய்து அதிமுக அரசு திறமையற்ற அரசு என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது .
எனவே,ஆதி திராவிட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அவர்களுடைய நலனுக்காக மட்டுமே பயன்படுத்துமாறும்,அவர்களை மேம்படுத்தும் நலத்திட்டங்களையும்,சமுதாயத்தில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் நான் அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications