முதலீட்டாளர்கள் மாநாடு... தொழிலதிபர்களை அதிமுக அரசு மிரட்டுகிறது: மு.க.ஸ்டாலின் புகார்
சென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வரும் தொழிலதிபர்களை தமிழக அரசு அதிகாரிகள் மிரட்டுவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக தமிழக அரசு ரூ.100 கோடி செலவிடுகிறது. முதல்வர் ஜெயலலிதா மாநாட்டை தொடக்கி வைக்கிறார். இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்து சுமார் 3,500 தொழில் முதலீட்டாளர்கள் வர உள்ளனர். இதில், 1000 பேர் வெளிநாட்டில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின், ‘முதலீட்டில் அதிக தொகையை காட்டுவதற்காக தொழிலதிபர்கள் மிரட்டப்படுவதாகவும், ரூபாய் 2 கோடி அளவு முதலீடு கூட ரூபாய் 100 கோடியாக கணக்கு காட்டப்படுவதாகவும்' குற்றம் சாட்டினார்.
சி.ஆர்.சரஸ்வதி மறுப்பு
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை அதிமுகவின் செய்தி தொடர்பாளரான சி.ஆர்.சரஸ்வதி மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "யாரும் யாரையும் மிரட்ட முடியாது என குறிப்பிட்ட சி.ஆர்.சரஸ்வதி, மு.க.ஸ்டாலின் ஏதோ பேச வேண்டும் என்கிற காரணத்திற்காக பேசுகிறார். திமுக ஆட்சியில் தமிழகம் இருண்டு போய் இருந்தது. அதனை சரி செய்யவே அதிமுகவிற்கு 3 ஆண்டுகள் தேவைப் பட்டது' என்றார்.
மேலும், திமுக ஆட்சியில் செம்மொழி மாநாடு நடத்தியதால் யாருக்கு என்ன லாபம் எனவும் அவர் அப்போது கேள்வி எழுப்பினார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications