ஜெயலலிதா எங்கள் நினைவில் வாழ்கிறார்... அதிமுகவினர் கண்ணீருடன் மவுன ஊர்வலம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 30வது நினைவு நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அதிமுகவினர் மவுன ஊர்வலம் வந்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். இன்றுடன் ஒரு மாதம் முடிந்து விட்டது. ஜெயலலிதா இறந்து ஒரு மாதம் முடிந்து விட்டு நிலையில் தமிழகம் முழுவதிலும் அமைதி ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன.
அமைச்சர்கள்,நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தென்சென்னை வடக்கு மாவட்டக் கழகம் சார்பில், மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலம், ஜெயலலிதா நினைவிடத்தை சென்றடைந்தது. அங்கு அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
வடசென்னை தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், மண்ணடி சந்திப்பில் இருந்து தொடங்கிய அமைதி ஊர்வலம் ராயபுரம் வழியாகச் சென்று G.A. சாலையில் நிறைவடைந்தது. அம்மாவின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் திரு. D. ஜெயக்குமார், வடசென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.நா.பாலகங்கா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர் உதயகுமார்
மதுரை திருமங்கலத்தில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் உசிலம்பட்டி சாலையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். ரதம் போல அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஜெயலலிதாவின் படத்தை வைத்து மவுனமாக ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

பழனியில் நினைவஞ்சலி
திண்டுக்கல் மாவட்டம் சார்பில் நடைபெற்ற 30வது நாள் நினைவஞ்சலி கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வேடசந்தூர் எம்.எல்.ஏ விபிபி பரமசிவம், முன்னாள் மேயர் மருதராஜ், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்
தென்சென்னை தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், விருகம்பாக்கம் தசரதபுரத்தில் தொடங்கிய அமைதி ஊர்வலம் நடைபெற்றது. சிவன் பூங்கா அருகே அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு அதிமுகவினர் மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் பங்கேற்பு
ஈரோடு மாநகர் மாவட்டக் கழகம் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

தம்பித்துரை அஞ்சலி
கரூரில் நடைபெற்ற 30வது நாள் அஞ்சலி கூட்டத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு கொள்கை பரப்பு செயலாளரும், லோக்சபா துணை சபாநாயகருமான மு. தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் கழக நிர்வாகிகள் கண்ணீர் மல்க மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications