சிவகாசி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடக்கோரி விருப்ப மனு அளித்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !
சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விருப்ப மனு செய்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரையில் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார்.

அதனை தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தங்களது விருப்ப மனுவை வழங்கினர்.
இதில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருப்ப மனு செய்தார். ரூ.11 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனு தாக்கல் செய்தார்.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனஅள்ளி, ஒசூர், தளி ஆகிய 5 சட்டசபை தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட அதிமுக கிருஷ்ணகிரி மாவட்டச் செயலர் கோவிந்தராஜ் விருப்ப மனுக்களை சென்னையில் நேற்று தாக்கல் செய்தார்.












Click it and Unblock the Notifications