புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் பரபரப்பு.. மின் மீட்டரை உடைத்த அதிமுக எம்எல்ஏக்கள்
புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மின் மீட்டர்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video

புதுச்சேரி: மக்கள் உபயோகப்படுத்தும் மின்சாரத்தின் அளவைவிட மின் கட்டணம் அதிகமாக வருவதால் புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்ற வளாகத்தில் மின் மீட்டர்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநில அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன் வையாபுரி மற்றும் அதிமுகவினர் இன்று புதன்கிழமை புதுச்சேரி சட்டமன்ற வளாகத்துக்கு வந்து புதுச்சேரியில் மக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்ட புதிய மின் மீட்டர்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது அதிமுக எம்எல்ஏ ஊடகங்களிடம் பேசுகையில், புதுச்சேரியில் மொத்தம் 4 லட்சத்து 44 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. புதிய டிஜிட்டல் மின் மீட்டரைப் பொருத்துவதற்கு உத்தரவிடப்பட்டு புதிய மின் மீட்டர்கள் சீனாவிலிருந்து வாங்கி பொருத்தப்பட்டன. இதனால், ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் கட்டியவர்கள் தற்போது 3 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் கட்டி வருகின்றனர். அதனால், இந்த மின் மீட்டர் கருவிகளை மாற்றிவிட்டு புதிய மின் மீட்டர் கருவிகளை பொருத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் என்று கூறினார்.
புதுச்சேரியில் பொருத்தப்பட்ட புதிய மின் மீட்டர் கருவி மின் உபயோகத்தைவிட அதிகமாக மின் கட்டணம் வருவதாக பொதுமக்களிடையே குற்றச்சாட்டு உள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications