அதிமுகவுக்கு உரிமை கோரும் திவாகரன் பேச்சு- மூத்த தலைவர்கள் பயங்கர ஷாக்!
அதிமுகவுக்கு உரிமை கோரும் வகையில் திவாகரன் பேசியிருப்பது அக்கட்சி மூத்த தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னை: அதிமுகவின் தொடக்க காலம் முதலே கட்சியை பாதுகாத்ததில் தங்களுக்கு அதிக பங்கு உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலராகிவிட்ட சசிகலாவின் சகோதரர் திவாகன் பேசியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் சசிகலாவின் கணவர் நடராசன் நடத்திய பொங்கல் விழாவில் திவாகரன் பங்கேற்றார். அப்போது, அதிமுகவின் தொடக்க காலம் முதலே கட்சியை பாதுகாத்ததில் தங்களுக்கு அதிக பங்கு இருக்கிறது; நாங்கள் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல என கூறியிருந்தார்.

அத்துடன் மத்திய அரசையும் மிக கடுமையாக விமர்சித்து, அதிமுக, திராவிடர் கட்சி; ஆரியர் கட்சி அல்ல என விமர்சித்திருந்தார். அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா ஆகிவிட்ட காரணத்தாலே மன்னார்குடி குடும்பத்துக்குதான் அதிமுக சொந்தம் என்பது போல திவாகரன் பேசியிருப்பது அக்கட்சியில் உள்ள எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர்தான் ஜெயலலிதாவின் பின்னால் பதுங்கிக் கொண்டு இருந்தது மன்னார்குடி கோஷ்டி. ஆனால் இப்போது அதிமுகவின் தொடக்க காலம் முதலே இக்கட்சியை பாதுகாத்தது நாங்கள் என பகிரங்கமாக பேசியிருக்கிறார். இது இனி அதிமுக மன்னார்குடி குடும்ப கட்சியாக இருக்கும் என்பதையே திவாகரனின் பேச்சு காட்டுவதாக அந்த தலைவர்கள் கருதுகின்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications