ஜெ., நலம் பெற வேண்டி கர்நாடகாவிலிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு நடைபயணம் !
சென்னை: முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற வேண்டி கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து லட்சுமி பதி என்பவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நடைபயணமாக வந்தடைந்தார்.
சென்னை அப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதா கடந்த 25 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் நலம் பெற அப்பல்லோ மருத்துமனை முன்பு சர்வ சமயத்தினரும் பிரார்த்தனை நடத்தினர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர், பொது மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் அதிமுக எம்பி விஜயகுமார் தலைமையில் அதிமுகவினர் பால்குடம் எடுத்து வந்து அங்குள்ள நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்தும், கால்களில் ஆணி செருப்பு அணிந்தும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அதிமுகவினர் சிறப்பு யாக பூஜை நடத்தினர். ஆர்.எஸ்.மங்கலம் கைலாச நாதர் கோவிலில் இருந்து உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலுக்கு அதிமுகவினர் பால்குடம் எடுத்து வழிபட்டனர். இந்த பூஜையில் ராமநாதபுரம் எம்.பி அன்வர் ராஜா, திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
முதல்வர் பூரண உடல் நலம் பெற வேண்டி, கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து லட்சுமி பதி என்பவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நடைபயணமாக வந்தடைந்தார். 10 நாட்கள் இந்த பயணத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications