• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் உதவியால் புதுவாழ்வு பெற்றாள் நாகை கனிஸ்ரீ.. சந்தோஷத்தில் தந்தை.. நன்றி நல் உள்ளங்களே!!!

By Siva

சென்னை: ராஜேஷின் கண்களில் அத்தனை சந்தோஷம், நிம்மதி.. இதயம் முழுவதும் நன்றியை நிரப்பி வைத்திருக்கிறார். "தயாள குணமுள்ளவர்களால் என் இரண்டு மகள்களும் சிரித்து விளையாடுவதை முதன்முதலாக பார்க்கிறேன்" என்று கூறுகிறார் ராஜேஷ்.

நாகை மாவட்டத்தை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி கடந்த ஆண்டு மே மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இரண்டாவது குழந்தைக்கு கனிஸ்ரீ என்று பெயர் வைத்தனர்.

After 1 year of waiting, little Kanisri finally received her surgery thanks to you!

போலியோ சொட்டு மருந்து கொடுக்க மருத்துவமனைக்கு சென்ற இடத்தில் கனிஸ்ரீயை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தையின் இதயத்தில் பிரச்சனை இருப்பதாக சந்தேகித்து பரிசோதனை செய்யுமாறு கூறினார். இதையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடந்த இலவச மருத்துவ முகாமிற்கு கனிஸ்ரீயை தூக்கிச் சென்றார் ராஜேஷ்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் இதயத்தில் பிரச்சனை இருப்பதை கண்டறிந்தனர். பிறந்து 22 நாட்களே ஆன நிலையில் கனிஸ்ரீக்கு இதயத்தில் பிரச்சனை (fallout hypoplastic PV) இருப்பதை அறிந்து ராஜேஷும், அவரது மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதும் பணத்திற்கு எங்கே செல்வது என்று ராஜேஷ் கவலைப்பட்டார்.

உங்களின் உதவியாலும் கடவுளின் கருணையாலும் இந்தக் குழந்தைகள் தங்களது கடினமான நேரத்தைக் கடந்து வந்து வென்றுள்ளன. ஆனால் வீர் மற்றும் தனஸ்ரீ ஆகிய 2 குழந்தைகள் உங்களின் உதவி நாடி நிற்கின்றனர். அவர்களுக்கும் நீங்கள் உதவலாமே?

இன்னும் 2 குழந்தைகள் உங்களின் உதவி நாடி நிற்கின்றனர். அவர்களுக்கும் நீங்கள் உதவலாமே?

இந்த 1 வயது குழந்தைக்கு மூச்சு விடுவது கூட சிரமமானது

இவர்களுக்கு நீங்கள் உதவினால், இவர்களும் கனிஸ்ரீ போல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.

அறுவை சிகிச்சைக்கு ரூ. 5 லட்சம் செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். வங்கியில் கடன் கேட்டால் கொடுக்கவில்லை. இன்சூரன்ஸ் திட்டம் எதுவும் இல்லை, அவ்வளவு பெரிய தொகையை கடன் கொடுக்கும் வசதி படைத்த உறவினர்கள் இல்லை. தன் வருமானத்தில் முடிந்தவற்றை வைத்து மகளுக்கு சிகிச்சை அளித்து ஓராண்டை கடத்தினார் ராஜேஷ்.

After 1 year of waiting, little Kanisri finally received her surgery thanks to you!

இதய பிரச்சனையால் குழந்தையின் உடல் அவ்வப்போது நீல நிறமாக மாறியதை பார்த்து கண்கலங்கினார் ராஜேஷ். கனிஸ்ரீயை காப்பாற்ற வழியே இல்லையா என்று ராஜேஷ் இடிந்துபோய் இருந்த போது முகம் தெரியாத தயாள குணமுள்ளவர்களிடம் உதவி கேட்க வழிவகை உள்ளது பற்றி அறிந்தார்.

கிரவுட்ஃபன்டிங் (crowdfunding) மூலம் கனிஸ்ரீயை காப்பாற்றுமாறு கெஞ்சினார் ராஜேஷ். நிதியிதுவி குவிந்தது. இரண்டு வாரங்களுக்குள் அவருக்கு ரூ. 4 லட்சம் பணம் கிடைத்தது. 262 பேர் அளித்த நன்கொடையால் கடந்த மாதம் 25ம் தேதி குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு குழந்தை கனிஸ்ரீ நலமாக உள்ளார்.

இது குறித்து ராஜேஷ் கூறியதாவது,

என் மகள் கனிஸ்ரீ சிரித்து விளையாடியதை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. கனிஸ்ரீ பிறந்த பிறகு தற்போது தான் என் இரண்டு மகள்களும் சேர்ந்து சிரித்து விளையாடுகிறார்கள். கனிஸ்ரீயின் அறுவை சிகிச்சைக்கு உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தாராளமாக நன்கொடை அளிக்காவிட்டால் நான் என்ன செய்திருப்பேன் என்று தெரியாது என்றார்.

அந்த ஏழைத் தந்தையின் முகத்தில் தெரியும் சந்தோஷமும், நிம்மதியும், மகிழ்ச்சியும், கூடவே கலந்து வரும் நன்றி உணர்வுக்கும் விலை மதிப்பே கிடையாது!

உங்களின் உதவியாலும் கடவுளின் கருணையாலும் இந்தக் குழந்தைகள் தங்களது கடினமான நேரத்தைக் கடந்து வந்து வென்றுள்ளன.

 
 
 
English summary
Baby Kanisri has undegone heart surgery after one year of waiting for money. Thanks to all the generous hearted who have made this possible.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more