"மாஃபா" அதிமுக வந்த ராசிதான்... ஜெ. மரணமடைந்தார்.. விபி.கலைராஜன் பரபர குற்றச்சாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாஃபா பாண்டியராஜன் வந்ததால்தான் ஜெயலலிதா மரணமடைந்தார் என அதிமுக அம்மா அணியின் முன்னாள் எம்எல்ஏ விபி கலைராஜன் தெரிவித்துள்ளார். மாஃபா பாண்டியரஜனும் மைத்ரேயனும் தான் இரு அணிகளும் இணையவிடாமல் தடுக்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து வந்த பிறகு போயஸ் கார்டனையும் அதிமுக தலைமைக் கழகத்தையும் சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து கைப்பற்றுவேன் என கூறினார். அதற்கு பதிலளத்த சசிகலா அணியின் விபி கலைராஜன் தலைமைக் கழகத்தை கைப்பற்ற நினைப்பவர்களின் கை இருக்காது என்றார்.

அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு விபி கலைராஜன் சிறப்பு நேர்க்காணல் அளித்தார்.

மாஃபா தான் பிரச்சனையே

மாஃபா தான் பிரச்சனையே

அப்போது அதிமுகவின் இரு அணிகளும் இணைய விடாமல் மாஃபா பாண்டியராஜனும் மைத்ரேயனும் தடுத்து வருவதாக குற்றம்சாட்டினார். அவர்கள் இருக்கும் வரை இரு அணிகளும இணைவது சிக்கல் என்றும் அவர் கூறினார்.

மூப்பனார் போய்விட்டார்

மூப்பனார் போய்விட்டார்

மாஃபா பாண்டியராஜன் போகாத கட்சியே இல்லை என்றும் கலைராஜன் கூறினார். மாஃபா பாண்டியராஜன் மூப்பனார் கட்சிக்கு சென்றார். அவர் இறந்து விட்டார்.

விஜயகாந்த்துக்கு உடல்நலக்குறைவு

விஜயகாந்த்துக்கு உடல்நலக்குறைவு

அடுத்ததாக மாஃபா பாண்டியரான் தேமுதிகவுக்கு சென்றார். விஜயகாந்த் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா இறந்தார்

ஜெயலலிதா இறந்தார்

பிறகு மாஃபா பாண்டியராஜன் அதிமுகவுக்கு வந்தார். அவர் வந்ததால் தான் ஜெயலலிதா இறந்துபோனார்.

ஓபிஎஸ்க்கு என்ன கதியோ

ஓபிஎஸ்க்கு என்ன கதியோ

இப்போது ஓபிஎஸ் அணியில் உள்ளார். அவருக்கு என்ன ஆகப்போகிறதோ தெரியவில்லை என்றும் விபி கலைராஜன் பேசினார். இரு அணிகளும் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில் கலைராஜனின் இந்தபேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
VP Kalairajan tells that after Mafoi Pandiyarajan arrival only Jayalalitha dies. He said Mafoi Pandiyarajan only spoiling twoteams talk.
Please Wait while comments are loading...