டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரியிலும் மீண்டும் கனமழை!
காவிரி டெல்டா மாவட்டங்களான கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுச்சேரியிலும் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது.
புதுச்சேரி : புதுச்சேரி மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மீண்டும் மழை தொடங்கியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை சற்று இடை வெளி விட்டு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

திருவாரூர், நன்னிலம், குடவாசல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர் மஞ்சை நகர், புதுநகர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சேத்தியோதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதே போன்று நாகப்பட்டினம் மாவட்டம் நாகை மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழைநாகை மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரங்களிலம் மழை வெளுத்து வாங்குகிறது. அரியாங்குப்பம், தவளக்குப்பம், கன்னியகோவில், முள்ளோடை, திருபுவனையில் பலத்த மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிக அளவில் மழை பதிவான நிலையில், இன்று மாநகரப் பகுதியில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. இதே போன்று கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செங்கல்பட்டு, சுற்றுவட்டார இடங்களில் மழை பொளந்துகட்டுகிறது.












Click it and Unblock the Notifications