ஓபிஎஸ்க்கு திருவண்ணாமலை எம்.பி. வனரோஜாவும் ஆதரவு !
திருவண்ணாமலை லோக்சபா தொகுதி எம்.பி. வனரோஜா இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாமக்கல் எம்பி சுந்தரம், கிருஷ்ணகிரி எம்பி அசோக் குமார், திருப்பூர் எம்.பி சத்தியபாமா ஆகியோர் இன்று ஆதரவு தெரிவித்திருந்தார். தற்போது திருவண்ணாமலை லோக்சபா தொகுதி எம்.பி வனரோஜாவும் இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக பிளவுபட்ட நிலையில், இருதரப்பினரும் தங்களது பலத்தை நிரூபிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்கனவே 6 சட்டசபை உறுப்பினர்களும், எம்.பி.க்கள் உறுப்பினர்கள் மைத்ரேயனும் ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையே சனிக்கிழமை கிருஷ்ணகிரி லோக்சபா உறுப்பினர் அசோக்குமார், நாமக்கல் லோக்சபா உறுப்பினர் சுந்தரம் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து இன்று மாலையில் திருப்பூர் லோக்சபா எம்.பி சத்தியபாமா முதல்வர் பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் திருவண்ணாமலை லோக்சபா எம்.பி. வனரோஜா முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப நான் ஆதரவளிக்க வந்துள்ளதாக தெரிவித்தார்.
சத்துணவு அமைப்பாளராக இருந்த வனரோஜா அதை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தவர். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சத்துணவு அமைப்பாளராக இருந்த வனரோஜாவை, உப்பிலியாபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நிறுத்தி எம்.எல்.ஏ.வாக்கினார். ஜெயலலிதா, சத்துணவு அமைப்பாளராக இருந்த வனரோஜாவை எம்.பி. யாக ஆக்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications