ஏன் இந்த குழப்பம்.. அரைக் கம்பத்திற்கு இறக்கிய கட்சி கொடியை மீண்டும் ஏற்றிய அதிமுக தலைமை அலுவலகம்!
ஜெயலலிதா உடல்நிலை குறித்த மாறுபட்ட தகவல்களால் அதிமுக கட்சி கொடி இறக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது.
சென்னை: ஜெயலலிதா உடல் நிலை குறித்து வெளியான தவறான தகவலால் அதிமுக தலைமை அலுவலகத்தில் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கட்சி கொடி மீண்டும் மேலே ஏற்றி பறக்கவிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா கவலைக்கிடம் என செய்திகள் வெளியான நிலையில், மாலையில் சில டிவி மீடியாக்கள், ஜெயலலிதா உடல்நிலை குறித்து மோசமான வதந்தியை கிளப்பிவிட்டன. இந்த செய்தியை வெளியிடலாமா வேண்டாமா என தெரியாமல் பிற ஊடகங்கள் திணறிய நேரத்தில், அதிமுக கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டையில் கட்சி கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

எனவே பிற ஊடகங்களும், வதந்தி செய்தியை உண்மை என நம்பி வெளியிட்டன. இந்த நிலையில், டிவி சேனல் செய்தியை மறுத்து அப்பல்லோ நிர்வாகம் டிவிட்டும், அறிக்கையும் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதிமுக கொடி முழுக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
#WATCH: Party flag hoisted again at AIADMK HQs in Chennai #jayalalithaa pic.twitter.com/8dAqqTwjSc
— ANI (@ANI_news) December 5, 2016
ஊடகங்களில் ஏற்பட்ட செய்தி குழப்பத்திற்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த குழறுபடிகள் முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை. ஏனெனில் ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமை அலுவலகத்திலுள்ள கொடியை இறக்கி ஏற்றுவது என்பது விளையாட்டான விஷயமில்லை.
-
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications