ஜெ. உடல்நலம்...விஷமிகளின் வதந்திகளுக்கு பதிலடி தர அதிமுக அதிரடி வியூகம் #MyCMisfine
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து வதந்திகள் பரவி வரும் நிலையில், அதை தவிர்க்க சட்டப்படியான நடவடிக்கைகளை அதிமுக எடுத்துள்ளது ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம், முள்ளை முள்ளால் எடுப்பதை போல சோஷியல் மீடியா வாயிலாகவே பாசிட்டிவ் கருத்துக்களை பரப்பி வருகிறது அதிமுக ஐ.டி விங்க்.
அடித்தட்டு மக்கள் வாக்கு பலத்தை கொண்ட அதிமுக முதலில் சமூக வலைத்தள செயல்பாட்டில் பின்தங்கியே இருந்தது. ஆனால் பிற கட்சிகள் ஐ.டி. விவகாரங்களில் முன்னிலையில் போய்க்கொண்டிருப்பதை பார்த்து லேட்டாகவே அலர்ட் ஆனது அதிமுக.

ஒருவழியாக அதிமுக கட்சிக்கு அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் ஆரம்பிக்கப்பட்டு தகவல்கள் பரிமாறப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்பிறகு தகவல் தொடர்பு பிரிவும், துரித கதியில் இயங்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தேர்தல் நேரத்தைவிட துரிதமாக மறுபடியும், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஐடி பிரிவும் அதி வேகமாக இயங்க தொடங்கியுள்ளது.
அதிலும் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பிறகு, ஐடி பிரிவுக்கு, இப்போது கொஞ்சம் அதிகமாகவே வேலை வந்துள்ளது.
முதல்வர் பற்றி வதந்திகள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில்தான் கையிலெடுத்தது #MyCMIsFine என்ற ஹேஷ்டேக்கை. இதன் டேக்கின்கீழ், முதல்வர் உடல்நிலை குறித்த பாசிட்டிவ் தகவல்களை பரிமாறத் தொடங்கியது ஐடி விங். மேலும், யாராவது முதல்வர் குறித்து அவதூறு பரப்பினால், அந்த பயனாளர்களை அடையாளம் கண்டுபிடித்து, காவல்துறையிடம் புகார் அளிக்கவும், ஐடி விங் தீவிரமாக களமாடியது.
இதன் விளைவுதான், ஐடி விங் செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் இதுவரை சாப்ட்வேர் இன்ஜினியர், வங்கி ஊழியர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருபக்கம் பாசிட்டிவ் கருத்துக்களை பரப்புவது மறுபக்கம் நெகட்டிவ் கருத்தாளர்களை அடையாளம் காண்பது என பயணிக்கிறது ஐடி விங்க்.
அப்படி சில டிவிட்டுகளை இங்கே பாருங்கள்
The truth behind Apollo Hospital. Please read and pass on.. #MyCMisFine #KickAwayRumours pic.twitter.com/ERzZxJwCmz
— Hari Prabhakaran (@Hariadmk) October 8, 2016
#என்முதல்வர்நலம் .#தமிழ்நாட்டின்வளம் .#MyCMisFine..#NoMoreRumours
— Er kesavan Aiadmk (@kesavanadmk2015) October 10, 2016
Facebook :https://t.co/AmAhz5soSM
Twitter :https://t.co/fTuIOrXiS6
AMMA the lioness.. CM of TN will be back soon..Positive sign no ventilator.... Amma without you we are hopeless.. #MyCMisFine
— Jagan (@jaganbhonsle) October 8, 2016
விழுவதுபோல் கொஞ்சம் விழுந்தே நடிப்பேன் எதிரிகள் நலம்காண,
— சோழர்பரம்பரையில் (@oruMLAda) October 3, 2016
எழுவதென்றாலும் மலை போல் எழுவேன் நண்பர்கள் நலம்காண...#MyCMisfine












Click it and Unblock the Notifications